For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உருளைக்கிழங்கு பீன்ஸ் சப்ஜி

By Maha
|

அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய காய்கறிகளில் ஒன்று தான் உருளைக்கிழங்கு. அதே சமயம் வெறுக்கும் காய்கறி என்றால் அது பீன்ஸ் என்று சொல்லலாம். ஏனெனில் பெரும்பாலான வீடுகளில் அடிக்கடி பீன்ஸைத் தான் சமைப்பார்கள். அதனாலேயே பலர் அதனை வெறுக்கிறார்கள்.

இருந்தாலும் பீன்ஸில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளதால், அதனை உருளைக்கிழங்குடன் சேர்த்து சப்ஜி செய்து சாதம், சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இங்கு அந்த உருளைக்கிழங்கு பீன்ஸ் சப்ஜியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

Quick Aloo Beans Sabzi For Working People

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்து துண்டுகளாக்கப்பட்டது)
பீன்ஸ் - 7-8 (நறுக்கி வேக வைத்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தை சேர்த்து தாளிக் வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு, 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, சீரகப் பொடி சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.

அடுத்து அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பீன்ஸ் சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

இறுதியில் அதில் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், உருளைக்கிழங்கு பீன்ஸ் சப்ஜி ரெடி!!!

English summary

Quick Aloo Beans Sabzi For Working People

Here is the recipe for quick aloo beans ki sabzi. Have a look and we are sure it will come handy for the working people.
Story first published: Monday, September 15, 2014, 11:25 [IST]
Desktop Bottom Promotion