For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உருளைக்கிழங்கு மிளகு வறுவல்

By Maha
|

மழைக்காலத்தில் நன்கு காரசாரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதிலும் பலருக்கு பிடித்த உருளைக்கிழங்கை அப்படி செய்து சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும் அல்லவா! எனவே தமிழ் போல்ட் ஸ்கை உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ரெசிபியை உங்களுக்காக கொடுத்துள்ளது.

இந்த ரெசிபியை மதிய வேளையில் சாம்பார் மற்றும் ரச சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு மிளகு வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Potato Pepper Fry Recipe

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4
மிளகு - 15 (லேசாக பொடித்தது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி, குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் விசில் போனதும் குக்கரை திறந்து, உருளைக்கிழங்கின் தோலுரித்து விட்டு, பின் அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், 1/2 டீஸ்பூன் பொடித்த மிளகு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

பின் அதில் மீதமுள்ள பொடித்த மிளகு, சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட்டு, இறுதியில் சர்க்கரையை சேர்த்து பிரட்டி இறக்கினால், உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ரெடி!!!

இதுப்போன்று சுவையான மற்றும் ஈஸியான ரெசிபிக்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்.

English summary

Potato Pepper Fry Recipe

Potato pepper fry is a recipe that is simple but delicious. It is one of the traditional Indian aloo recipes that comes from your mom's kitty. To know more..
Desktop Bottom Promotion