For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காளான் மஞ்சூரியன் கிரேவி

By Maha
|

அனைவரும் கோபி மஞ்சூரியன் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் காளான் மஞ்சூரியன் கேள்விப்பட்டதுண்டா? அதுவும் காளான் மஞ்சூரியன் கிரேவியை கேள்விப்பட்டதுண்டா? இல்லை தானே! ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஈஸியான முறையில் எப்படி காளான் மஞ்சூரியன் கிரேவி செய்வதென்று உங்களுக்காக கொடுத்துள்ளது.

அதைப் படித்து செய்து பாருங்கள். குறிப்பாக இந்த கிரேவி இந்தியன் ஸ்டைலில் இருக்கும். சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

Mushroom Manchurian Gravy Recipe

தேவையான பொருட்கள்:

காளான் - 200 கிராம்
வெங்காயம் - 3 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4-5 (நீளமாக கீறியது)
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
பூண்டு - 8-9 பற்கள் (நறுக்கியது)
தக்காளி - 2 (அரைத்தது)
வினிகர் - சிறு துளிகள்
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காளானைப் போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 20-25 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

* அடுத்து குடைமிளகாய் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி, உப்பு மற்றும் வினிகர் சேர்த்து கிளறி, பின் தக்காளி, சாறு, பச்சை மிளகாய், சோயா சாஸ் சேர்த்து பிரட்டி, பிறகு ஊற வைத்துள்ள காளானை சேர்த்து, 2-3 நிமிடம் தீயை குறைவில் வைத்து, கிரேவி சற்று கெட்டியாகும் போது இறக்கி விட வேண்டும்.

English summary

Mushroom Manchurian Gravy Recipe

Here is a simple mushroom manchurian gravy recipe which can be easily prepared at home. The best part about this Chinese inspired dish is, it is prepared in the Indian style. Take a look...
Desktop Bottom Promotion