Latest Updates
-
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
வெங்காயமும், தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி கொங்கு ஃபேமஸ் தக்காளி தண்ணி சட்னியை ட்ரை பண்ணுங்க..
Kongu Famous Thakkali Thanni Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு 10 நிமிடத்தில் ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் சற்று புளிப்பாக சட்னி வேண்டுமா? அப்படியானால் வீட்டில் வெங்காயமும், தக்காளியும் இருந்தால், அவற்றைக் கொண்டு கொங்கு ஃபேமஸ் தக்காளி தண்ணி சட்னியை செய்யுங்கள்.
இந்த தக்காளி சட்னி 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு, இந்த சட்னியை இட்லியுடன் தொட்டு சாப்பிடாமல், பிசைந்து சாப்பிடும் போது, சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த சட்னியை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒருமுறை செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு கொங்கு ஃபேமஸ் தக்காளி தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்கு ஃபேமஸ் தக்காளி தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 1/2 கிலோ
* வெங்காயம் - 3
* பச்சை மிளகாய் - 2-3
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அடுப்பில் வைத்து, நீர்
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தக்காளி பழங்களை சேர்த்து, 5
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, தக்காளி பழங்களை வெளியே எடுத்து, அதன் தோலை
நீக்கிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, நீரை ஊற்றி,
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் 3
டீஸ்பூன் மல்லித் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி நன்கு,
5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* சட்னியில் இருந்து பச்சை வாசனை போனதும், அதில் கொத்தமல்லியைத் தூவி
இறக்கினால், சுவையான கோவை தக்காளி தண்ணி சட்னி தயார். இந்த சட்னி
தக்காளி தண்ணி சட்னி என்பதால், நீரை சற்று அதிகமாகவே ஊற்றிக்
கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications











