Latest Updates
-
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க..
வெங்காயம், தக்காளி, தேங்காய்-ன்னு எதுவும் சேர்க்காத தண்ணி சட்னி - எப்படி செய்யணும் தெரியுமா?
No Onion No Tomato No Coconut Thanni Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? அதற்கு எப்போதும் சட்னியை தான் அதிகம் செய்வீர்களா? பொதுவாக சட்னி செய்ய வெங்காயம், தக்காளி, தேங்காய் போன்றவற்றில் ஏதாவது ஒன்று அவசியம் தேவைப்படும்.
ஆனால் இந்த மூன்றும் இல்லாமலேயே ஒரு அருமையான சட்னியை செய்யலாம் தெரியுமா? இந்த சட்னியில் நீரை ஊற்றி தண்ணி சட்னி போன்று செய்து, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியில் பருப்புகள் அதிகம் சேர்ப்பதால், புரோட்டீன் அதிகம் நிறைந்த சட்னி.

உங்களுக்கு இந்த வெங்காயம் தக்காளி தேங்காய் சேர்க்காத தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காயம் தக்காளி தேங்காய் சேர்க்காத தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 8 பல்
* பச்சை வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் பச்சை வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு
நிறம் மாற வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொட்டுக்கடலையை சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் புளி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சிறிது நீரை ஊற்றி, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, தண்ணி சட்னிக்கு
தேவையான அளவு நீரை ஊற்றி, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான வெங்காயம்,
தக்காளி, தேங்காய் சேர்க்காத தண்ணி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











