Latest Updates
-
சுரைக்காயை இப்படி ஒருடைம் தொக்கு செய்யுங்க.. சூடான சாதத்துக்கு செமயா இருக்கும்... -
மீண்டும் புதிதாக உருவெடுத்து அமெரிக்காவில் பரவும் கொரோனா- இது எவ்வளவு ஆபத்தானது? இதன் அறிகுறிகள் என்ன? -
பாபா வாங்காவின் கணிப்பு படி அமெரிக்கா-ஈரான் போர் இந்தியா மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் தெரியுமா? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: மே முதல் இந்த 3 ராசிக்கார்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
ஏப்ரல் மாதத்தில் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க கோடிகளில் சம்பாதிக்கப் போறாங்களாம்...! -
பச்சை பட்டாணி பூரியும்.. உருளைக்கிழங்கு மசாலாவும்..- எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 30 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
2 ஆண்டுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்... உங்க ராசி இதுல இருக்கா? -
தக்காளி சட்னியை ஒருதடவை இந்த ஸ்டைலில் அரைச்சு பாருங்க... தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்...! -
தமிழ் சினிமாவிலிருந்து சென்று அரசியலில் ஜொலித்த நடிகர்களின் லிஸ்ட்... யாரெல்லாம் இருக்காங்க பாருங்க...!
தக்காளி பிரியாணி ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு செஞ்சு பாருங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்...!
Tomato Biryani Recipe in Tamil: அனைவருக்கும் பிடித்த வெரைட்டி சாதத்தில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது தக்காளி சாதம்தான். தக்காளி சாதம் அனைவருக்கும் பிடிக்க முதல் காரணம் அது பிரியாணி சுவையில் பாதியளவு இருப்பதால்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த இந்த தக்காளி சாதத்தை காலை, மதியம் மற்றும் இரவு என எந்த நேரத்திற்கு வேண்டுமென்றாலும் சமைக்கலாம்.
அனைவருக்கும் பிடித்த தக்காளி சாதத்தை எவ்வளவு நாள்தான் ஒரே மாதிரி சமைப்பது. பிரியாணி போல இருக்கும் தக்காளி சாதத்தை பிரியாணியை விட சுவையான உணவாக சமைக்க நீங்கள் விரும்புகிறீர்களா? ஆம் எனில் இந்த பதிவு உங்களுக்கானதுதான். ஏனெனில் இந்த முறையில் தக்காளி சாதத்தை செய்யும் போது அது பிரியாணியை விட சூப்பராக இருக்கும். அதனால்தான் இந்த ரெசிபி தக்காளி பிரியாணி என்று அழைக்கப்படுகிறது.

உங்களுக்கு தக்காளியை வைத்து பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 கப் பாஸ்மதி அரிசி
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 2 இன்ச் பட்டை
- 4 ஏலக்காய்
- 1 ஸ்பூன் சோம்பு
- 1 பெரிய வெங்காயம் மெல்லியதாக நறுக்கியது
- 2 பச்சை மிளகாய்
- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 4 பெரிய தக்காளி பொடியாக நறுக்கியது
- 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 2 ஸ்பூன் மிளகாய் தூள்
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
- தேவையான அளவு உப்பு
- 2 தேக்கரண்டி சர்க்கரை
- ¼ கப் கொத்தமல்லி இலைகள் பொடியாக நறுக்கியது
- ¼ கப் புதினா இலைகள் பொடியாக நறுக்கியது
- 1 கப் கெட்டியான தேங்காய்ப்பால்
- 2 கப் தண்ணீர்
செய்முறை:
- பாஸ்மதி அரிசியைக் கழுவி, 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு குக்கரில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். அதில் பட்டை, சோம்பு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும். அவை ஒரு நிமிடம் வரை பொரிய விடவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும்.
- அதன்பின் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீர் மிளகாய் தூளை சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு மற்றும் சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளிகளைச் சேர்த்து மசாலா தக்காளியுடன் நன்றாக கலக்கும் படி கிளறவும்.
- தக்காளி நன்கு குழைந்து மென்மையாகும் வரை, அவற்றை 5 நிமிடங்கள் வேகவிடவும்.
- பின்னர் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து, ஒரு முறை நன்றாகக் கிளறவும்.
- பின்னர் அதில் ஊறவைத்த அரிசி, தேங்காய்ப்பால் மற்றும் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின்னர் குக்கரை மூடி விசில் போட்டு 3 விசில் வரும் வரை வேக விடவும்.
- பின்னர் அடுப்பை அணைத்து அழுத்தம் வெளியேறியதும் மூடியை திறந்தால் மணமணக்கும் தக்காளி பிரியாணி ரெடி!



Click it and Unblock the Notifications











