அட்டகாசமான கொத்தமல்லி மாங்காய் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க

Posted By:

Summer Special Coriander Raw Mango Chutney in Tamil: கோடைகாலம் வந்தாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மாங்காய்தான். மாங்காயை ஊறுகாய், சாம்பார், புளிக்குழம்பு, ஜாம் ஏன் மிளகாய்ப்பொடி வைத்து பச்சையாகவே கூட சாப்பிடுவோம். ஆனால் மாங்காயை வைத்து இட்லி, தோசைக்கு ஒரு அட்டகாசமான சட்னியை செய்யலாம். அதிலும் இந்த சட்னியில் கொத்தமல்லி சேர்த்து அரைப்பதால் இதன் சுவை பலமடங்கு அதிகரிக்கும்.

இந்த கோடைகாலத்தில் நீங்கள் மாங்காய் வாங்கினால் ஒருமுறையாவது இந்த சட்னியை முயற்சி செய்து பாருங்கள். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருக்கும் அதேசமயம் சுவையும் அருமையாக இருக்கும். இந்த கொத்தமல்லி மாங்காய் சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். அனைத்திற்கும் மேலாக இந்த சட்னியை சில நிமிடங்களில் செய்து விடலாம். சமைக்க அதிக நேரமில்லாத போது டக்குனு இந்த சட்னியை செய்து விடலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு புதிதாக ஏதாவது செய்து தர விரும்பினால் இதை தாராளமாக முயற்சிக்கலாம்.

Summer Special Coriander Raw Mango Chutney How to Make Coriander Raw Mango Chutney

உங்களுக்கு கொத்தமல்லி மாங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி மாங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 3 கப் கொத்தமல்லி இலை
- 1 கப் புதினா இலை
- 2 நறுக்கிய பச்சை மிளகாய்
- 2 இன்ச் இஞ்சித் துண்டு
- 3 பூண்டு பல்
- ½ கப் தோலுரித்து நறுக்கிய பச்சை மாங்காய்
- தேவையான அளவு உப்பு
- ¼ ஸ்பூன் பெருங்காயம்
- 1 ஸ்பூன் சீரகம்

செய்முறை:

- முதலில் கொத்தமல்லி மற்றும் புதினாவை சுத்தம் செய்து கொள்ளவும். மாங்காயை தோலுரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

- ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, நறுக்கிய மாங்காய், உப்பு, பெருங்காயம் மற்றும் சீரகம் ஆகியவற்றுடன் ¼ கப் நீரையும் சேர்க்கவும்.

- சட்னியை அரைக்கும்போது, ​​அதன் பளிச்சென்ற பச்சை நிறம் நீண்ட நேரம் நீடித்திருக்க, 1-2 ஐஸ்கட்டிகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

- இந்த கலவையை மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

- இந்த சட்னி நைஸாக இருந்தால்தான் நன்றாக இருக்கும், எனவே தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

- உப்பின் சுவையைச் சரிபார்க்கவும்; தேவைப்பட்டால் இன்னும் சிறிது சேர்க்கவும். சட்னி போதுமான அளவு புளிப்பு சுவையுடன் இல்லையென்றால், சிறிது எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.

- அவ்வளவுதான் சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

- இந்த சட்னியில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்த சட்னியை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

[ of 5 - Users]
Story first published: Friday, April 10, 2026, 22:40 [IST]
Desktop Bottom Promotion