க்ரான்பெரி பிஸ்தா பிஸ்கட்டை எவ்வாறு தயாரிப்பது? (வீடியோ இணைப்புடன்)

Posted By: Batri Krishnan
Subscribe to Boldsky

இந்த குளிர்காலத்தில் நாம் அதிகமான உலர் பழங்கள், கொட்டைகள், மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படியே எடுத்துக் கொள்வதை விட அதைப் பயன்படுத்தி பல்வேறு வித்தியாசமான உணவுகளை தயாரித்து உட்கொள்வது மிகவும் நல்லது. உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளைப் பயன்படுத்தி நாம் பல்வேறு கேக்குகள் மற்றும் பிஸ்கோத்துகள் போன்றவற்றை தயாரிக்கலாம். 

க்ரான்பெரி பிஸ்தா பிஸ்க்கோத், பழங்கள் மற்றும் கொட்டைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒரு வித்தியாசமான உணவு ஆகும். மேழும் இது உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

பறிமாறும் அளவு - 10 துண்டுகள்

தயாரிப்பு நேரம் - 20 நிமிடங்கள்

சமையல் நேரம் - 40 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

1. உலர்ந்த க்ரான்பெரி - 1 கப்

2. பிஸ்தா - 1½ கப்

3. சுத்திகரிக்கப்பட்ட மாவு - 2 ½ கப்

4. உருகிய வெண்ணெய் - 1 கப்

5. ஐசிங் சக்கரை - 1½ கப்

6. முட்டை - 2

7. பேக்கிங் பவுடர் - ¼th தேக்கரண்டி

8. வெண்ணிலா - 2 தேக்கரண்டி

9. உப்பு - ஒரு சிட்டிகை

செயல்முறை:

1. ஒரு மிக்ஸியில் க்ரான்பெரி மற்றும் பிஸ்தாவை போட்டு அதை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

2. இப்போது, மிக்ஸியில் உருகிய வெண்ணெய், முட்டை, சுத்திகரிக்கப்பட்ட மாவு, ஒரு சிட்டிகை உப்பு மற்றும், ஐசிங் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கவும்.

3. மேலே குறிப்பிடப்பட்ட கலவையை மிக்ஸியில் நன்கு கலக்கினால் உங்களுக்கு ஒட்டும் பதத்தில் மாவு கிடைக்கும்.

cranberry pistachio biscotti

4. மிக்ஸியில் இருந்த மாவை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி விடுங்கள். இப்பொழுது மாவு ஒட்டும் பதத்தில் இருக்கும்.

5. ஒட்டும் பதத்தில் உள்ள மாவுடன் உதிரி மாவை கலந்து உங்கள் கைகளால் மாவை நன்கு திரட்டி உருட்ட வேண்டும்.

cranberry pistachio biscotti

6. இப்போது, சமையல் செய்யும் பாத்திரத்தின் மேல் சிறிது உதிரி மாவை தூவி, நீங்கள் திரட்டி வைத்துள்ள மாவை ஒரு உருளை வடிவத்தில் வைத்து விடுங்கள். மிகவும் கவனமாக மாவின் மேல் பரப்பை தட்டி மட்டப்படுத்துங்கள்.

7. இப்பொழுது ஒரு பேக்கிங் தட்டை எடுத்து அதில் உருளை வடிவ மாவை வைத்து விடுங்கள்.

cranberry pistachio biscotti

8. உங்களுடைய மைக்ரோவேவ் ஓவனை 160 டிகிரி செல்சியஸ் அளவிற்கு சூடாக்கி கேக்கை சுமார் 20-22 நிமிடங்கள் வரை பேக் செய்யுங்கள்.

9. பேக்கிங் முடிந்த பின்னர் அதை வெளியே எடுத்து சுமார் 10 நிமிடங்கள் வரை குளிர விடுங்கள்.

cranberry pistachio biscotti

10. இப்பொழுது அதை துண்டுகளாக வெட்டி விடுங்கள். வெட்டி முடித்த பின்னர் உங்களுடைய பிஸ்கோத் உட்புறம் வேகாமல் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

11. எனவே வெட்டிய துண்டுகளை பேக்கிங் தட்டில் மீண்டும் வைத்து சுமார் 10 நிமிடங்கள் வரை பேக் செய்ய வேண்டும்.

12. பேக்கிங் முடிந்த பின்னர் உங்களின் பிஸ்கோத்தை வெளியே எடுங்கள். இப்பொழுது உங்களின் மிருதுவான மற்றும் முறுமுறுப்பான க்ரான்பெரி பிஸ்தா பிஸ்கோத் தயார்.

நீங்கள் உங்களின் விருந்தினர்களுக்கு இந்த பிஸ்கோத்தை காபியுடன் இணைந்து பறிமாறி அவர்களை ஆச்சர்யப்படுத்துங்கள்.

English summary

cranberry pistachio biscotti

Method of preparation for cranberry pistachio biscotti
Story first published: Monday, November 28, 2016, 13:08 [IST]