Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
வீட்டுல சிக்கன் சமைக்கப் போறீங்களா? அப்ப இந்த 5 விஷயத்தை நினைவில் வச்சிக்கிட்டு சமைக்கணுமாம்.!
பெரும்பலான மக்கள் விரும்பி சாப்பிடும் ஓர் அசைவ உணவு சிக்கன். கோழி இறைச்சியை வறுத்தும், குழம்பு வைத்தும், பொரித்தும் என எந்த வடிவில் சமைத்தாலும், விரும்பி உண்ணப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் சிக்கன், உங்கள் உடலுக்கு புரத சத்தை வழங்குகிறது.
சிக்கன் சாப்பிடுவதால் உங்களுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்களும், நன்மைகளும் கிடைக்கின்றன. ஆனால், அவற்றை நீங்கள் சரியான முறையில் சமைக்கும்போது, மட்டுமே உங்களுக்கு சுவையும், ஆரோக்கிய நன்மையும் கிடைக்கும். நீங்கள் செயல்முறையை தெரிந்துகொண்டால், சிக்கன் சமைப்பது எளிதானதுதான்.

நீங்கள் உண்மையிலேயே இறைச்சியின் மென்மை மற்றும் ஜூஸி தன்மையை அனுபவிக்க விரும்பினால், சுவைகளை சரியாகப் பெற நீங்கள் சிக்கனை சரியாக சமைக்க வேண்டும். வீட்டில் சிக்கன் சமைக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்களை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
புதிய இறைச்சியை வாங்க வேண்டும்
நீங்கள் உண்மையிலேயே சுவையான கோழி கறியை சாப்பிட விரும்பினால், உறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை புறக்கணித்துவிட்டு, புதிய இறைச்சியை வாங்கத் தொடங்குங்கள். புதிய இறைச்சி ஈரப்பதமாகவும் சமைக்க நன்றாகவும் இருக்கும்.
மேலும் அது மசாலாப் பொருட்களுடன் சேர்த்து சமைக்கப்படும் போது, மசாலாப் பொருட்களின் சாரம் சமமாக உறிஞ்சப்படுகிறது. இதனால் நீங்கள் சமைக்கும் சிக்கன் டிஷ் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும.
சிக்கனை ஊற வைக்க மறக்காதீர்கள்
கோழி இறைச்சியை ஊற வைக்காமல் சமைக்க வேண்டாம். உப்பு நீர் மற்றும் மசாலாப் பொருட்களில் கோழி இறைச்சியை நன்றாக ஊறவைத்து சமைக்க வேண்டும். மஞ்சள் பொடியை சேர்த்து சிக்கனை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். மசாலா பொருட்களுடன் சிக்கனை ஊறவைத்து சமைக்கும்போது, அவற்றின் சுவை அற்புதமாக இருக்கும்.
இறைச்சியின் அளவை சரி பார்க்க வேண்டும்
கடைகளில் சிக்கன் வாங்கும்போது, இறைச்சி துண்டுகளை சமமாக வெட்டி வாங்குங்கள். வெவ்வேறு அளவுகளில் இறைச்சி இருந்தால், அவற்றை சமைப்பதற்கு நீண்ட நேரம் ஆகலாம். சில இறைச்சி துண்டுகள் சீக்கிரமாக வெந்துவிடும், சில இறைச்சி துண்டுகள் வேக நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.
அதனால், எப்போதும் இறைச்சி துண்டுகளை சமமான துண்டுகளாக வெட்ட பரிந்துரைக்கப்படுகிறது, இதனால் சமையல் சமமாக இருக்கும் மற்றும் நறுமணமான டிஷ் ஆகவும் இருக்கும்.
சமைக்கும் போது வாணலியை மூடி வைக்கவும்
கோழி கறியை நீங்கள் சமைக்கும் போது, கடாயை மூடி வைப்பது முக்கியம். இதனால் மூடி நீராவியில் பூட்டி ஈரப்பதத்தை வழங்க உதவுகிறது. இது கோழி கறி உலர்த்தப்படுவதைத் தவிர்க்க உதவும். நீங்கள் சமைத்து முடித்து சாப்பிடும்போது, சிக்கன் நன்றாக ஜூஸியாக இருக்கும்.
இறைச்சியை பேஸ்ட்போல மென்மையாக்குவது
இறைச்சியை அடித்து பேஸ்ட் போல மென்மையாக்கும் செயல் முக்கியமானது. சிக்கன் கோலா உருண்டை அல்லது இன்னும் பிற வகையான டிஷ்களை செய்ய மென்மையான சிக்கன் தேவைப்படும். சிக்கனை மேசையில் வைத்து நன்றாக அடிப்பது அல்லது கத்தியை கொண்டு பேஸ்ட்டாக மாற்ரல்மா. இது கோழியை மென்மையாக்க உதவுகிறது மற்றும் சீரான சமையலை உறுதி செய்கிறது. இதற்கு ஒரு இறைச்சி சுத்தி அல்லது சுத்தி உதவியுடன் செய்யப்படலாம்.



Click it and Unblock the Notifications
