Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க...
Kalyana Veetu Senaikizhangu Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு உள்ளதா? அந்த சேனைக்கிழங்கை நீங்கள் இதுவரை ப்ரை செய்து அதிகம் சாப்பிட்டிருக்கலாம். ஆனால் அடுத்தமுறை சேனைக்கிழங்கை செய்வதாக இருந்தால், கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவலை செய்யுங்கள்.
இந்த சேனைக்கிழங்கு வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சேனைக்கிழங்கு வறுவல் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், பேச்சுலர்கள் கூட இதை செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு இந்த கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சேனைக்கிழங்கு - 250 கிராம்
* பெரிய வெங்காயம் - 3
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கரம் மசாலா - 2 ஸ்பூன்
* தக்காளி - 1
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* தேங்காய் - 1/4 கப்
* எண்ணெய் - 3 ஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சேனைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், துண்டுகளாக்கி வைத்துள்ள சேனைக்கிழங்கை
சேர்த்து, ப்ரை செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் 3 வெங்காயத்தை போட்டு அரைத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 டீஸ்பூன் சோம்பு
மற்றும் அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, சுவைக்கேற்ப உப்பு மற்றும் கரம் மசாலாவை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ப்ரை செய்து வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் தேங்காய், தக்காளி, கொத்தமல்லி, புதினா,
சோம்பு, சீரகம், மிளகு, இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்ததை வெந்து கொண்டிருக்கும் சேனைக்கிழங்குடன்
சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
நீர் வற்றி வறுவல் போன்று வந்ததும், மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவி
கிளறி இறக்கினால், சுவையான கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல்
தயார்.



Click it and Unblock the Notifications











