Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் மட்டன் மசாலா செய்வது எப்படி?
எப்போதும் வீட்டில் உள்ளோருக்கு ஒரே மாதிரியான ஸ்டைலில் தான் மட்டனை சமைத்து கொடுக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் மட்டனை சமைத்துக் கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் மட்டன் மசாலா செய்யுங்கள்.
Restaurant Style Mutton Masala: உங்கள் வீட்டில் உள்ளோர் மட்டனை விரும்பி சாப்பிடுவார்களா? எப்போதும் வீட்டில் உள்ளோருக்கு ஒரே மாதிரியான ஸ்டைலில் தான் மட்டனை சமைத்து கொடுக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் மட்டனை சமைத்துக் கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் மட்டன் மசாலா ரெசிபியை செய்து கொடுங்கள்.
இந்த மட்டன் மசாலா சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த மட்டன் மசாலா செய்வது மிகவும் சுலபம். மேலும் இது பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். உங்களுக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் மட்டன் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் மட்டன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 650 கிராம்
* எலுமிச்சை - பாதி
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* தயிர் - 1/4 கப்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 1 கையளவு
தாளிப்பதற்கு...
* பட்டை - 1 இன்ச்
* பச்சை ஏலக்காய் - 2
* கருப்பு ஏலக்காய் - 1
* மிளகு - 8
* கிராம்பு - 4
* பிரயாணி இலை - 1
செய்முறை:
* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த மட்டனில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தக்காளி மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் அரைத்த தக்காளியை ஊற்றி நன்கு கிளறி, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அதையும் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி சில நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
* அதைத் தொடர்ந்து தயிரை சேர்த்து நன்கு கிளறி, சில நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பின் அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சில நிமிடங்கள் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி கொதிக்க வைத்து, குறைவான தீயில் வைத்து 10-12 நிமிடம் மட்டனை வேக வைக்க வேண்டும்.
* பின்பு தீயை அதிகரித்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து மட்டன் வெந்துவிட்டதா என்பதை சோதித்துப் பாருங்கள். ஒருவேளை மட்டன் வேகாமல் இருந்தால், மீண்டும் குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்குங்கள்.
* பிறகு குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து கிரேவியை மசாலா பதத்திற்கு சுண்ட கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கரம் மசாலாவை சேர்த்து 1 நிமிடம் கிளறி, மட்டன் மசாலாவில் சேர்த்து, மேலே கொத்தமல்லியைத் தூவினால், ரெஸ்டாரண்ட் ஸ்டைல் மட்டன் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications











