1 ஸ்பூன் பொட்டுக்கடலை, 2 பெரிய வெங்காயம் இருந்தா இந்த சட்னியை செஞ்சு பாருங்க... தோசைக்கு சூப்பரா இருக்கும்...!

Posted By:

Pottukadalai Vengaya Chutney Recipe in Tami: பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு உணவாக இருப்பது இட்லி, தோசைதான். இட்லி, தோசைக்கு சிறந்த சைடிஷ் என்றால் அது சந்தேகமே இல்லாமல் சட்னிதான். சட்னி என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது தேங்காய் சட்னிதான்.

தென்னிந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே இட்லி, தோசைக்கு பெரும்பாலும் செய்யப்படும் எளிதான மற்றும் சுவையான சைடிஷ் என்றால் அது தேங்காய் சட்னிதான். உங்கள் வீட்டில் இன்று இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? பெரும்பாலும் உங்கள் வீட்டில் இதற்கு சைடு டிஷ்ஷாக தேங்காய் சட்னியைத் தான் செய்வீர்களா?

Pottukadalai Vengaya Chutney Recipe How to Make Pottukadalai Vengaya Chutney

ஆம் எனில், வழக்கமான தேங்காய் சட்னி செய்யாமல் இதுபோல பொட்டுக்கடலை வெங்காய சட்னி செஞ்சு பாருங்க. இந்த பொட்டுக்கடலை வெங்காய சட்னி செய்வதற்கு கொஞ்சம் வித்தியாசமாகவும், தனித்துவமான சுவையுடனும் இருக்கும். இந்த பதிவில் பொட்டுக்கடலை வெங்காய சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:

- காய்ந்த மிளகாய் - 2
- பச்சை மிளகாய் - 1
- பெரிய வெங்காயம் - 2
- கறிவேப்பிலை ஒரு கொத்து
- பெரிய தக்காளி - 1
- கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
- புதினா இலை - அரை கைப்பிடி
- பூண்டு - 5 பல்
- துருவிய தேங்காய் - அரை அரை கப்
- புளி - சிறுநெல்லிக்காய் அளவு
- இஞ்சி - ஒரு துண்டு
- பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- கடுகு -அரை டீஸ்பூன்
- உளுந்து - அரை டீஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- வரமிளகாய் - ஒன்று

செய்முறை:

- முதலில் தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சுத்தம் செய்து தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

- கொத்தமல்லி தழை, புதினா இலைகளை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

- எண்ணெய் நன்கு காய்ந்ததும் வரமிளகாய் 2, பச்சை மிளகாய் ஒன்று சேர்த்துக் கொள்ளுங்கள். 2 வகையான மிளகாயும் சேர்ப்பதால் இரண்டின் சுவையும் அதில் இறங்கும்.

- பிறகு பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வதங்கி வர, ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டுகளையும் சேர்த்து நன்கு வதங்கி வரும் பொழுது, சுத்தம் செய்து வைத்துள்ள கொத்தமல்லி தழை மற்றும் புதினா இலைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- இவை அனைத்தும் சுருள வதக்கி வரும் பொழுது ஐந்து பூண்டுப் பற்களை தோலுரித்து சேருங்கள். பூண்டு அதிகம் வதங்கக் கூடாது.

- பின்னர் துருவிய தேங்காய் துருவல் அரை கப் சேர்த்து வதக்கவும். பின்னர் சிறு நெல்லிக்காய் அளவு புளி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- பின்னர் ஒரு துண்டு இஞ்சியை நறுக்கி சேருங்கள். இஞ்சி சட்னிக்கு கூடுதல் சுவையைக் கொடுக்கும். லேசாக வதக்கி விட்டு பின்பு கடைசியாக ஒரு டீஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடுங்கள்.

- பின்பு இவை ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொண்டு, அதில் இவற்றை சேர்த்து அதிகம் நைஸாக இல்லாமல் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

- எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வர மிளகாய் ஆகியவற்றை கிள்ளி சேர்த்து தாளித்து சட்னியுடன் கொட்டி இறக்கினால் அட்டகாசமான பொட்டுகடலை வெங்காய சட்னி தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion