Latest Updates
-
பிரியாணியை விட சூப்பரா இருக்கும் தக்காளி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
150 ஆண்டுக்கு மேல் வாழும் பாகிஸ்தானின் ரகசிய இனக்குழு பெண்கள் - இவர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன தெரியுமா? -
கோதுமை ரவா பொங்கலும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குதூகலமான நாளாக இருக்குமாம் -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-செவ்வாய்: மே 10 வரை இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
குருபகவான் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
கர்நாடகா பேமஸ் குடைமிளகாய் தக்காளி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
உங்க முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க! -
வெயில் காலத்தை சமாளிக்க உதவும் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
தமிழ்நாட்டில் தேர்தல் களத்தை மாற்றப்போகும் ஸ்டார் வேட்பாளர்களும் அவர்களின் தொகுதிகளும்
1 உருளைக்கிழங்கும், 1 கப் இட்லி மாவும் இருந்தா, ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
Crispy Potato Snacks Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு காபி, டீ குடிக்க கொடுக்கும் போது, அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா?
உங்கள் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் பிடிக்குமா? அப்படியானால் அந்த உருளைக்கிழங்கை இட்லி மாவுடன் சேர்த்து ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். இந்த ஸ்நாக்ஸ் மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 1
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - 1 டீஸ்பூன்
* இட்லி மாவு - 1 கப்
* வரமிளகாய் - 3
* பூண்டு - 4 பல்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* அரிசி மாவு - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை நீளத்
துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதே சமயம் வெதுவெதுப்பான நீரில்
வரமிளகாயை 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் 1 டீஸ்பூன் உப்பு
சேர்த்து அடுப்பில் வைத்து, உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து,
உருளைக்கிழங்கு முக்கால்வாசி வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, நீரை
வடிகட்டிவிட்டு, உருளைக்கிழங்கை நன்கு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த வரமிளகாய், பூண்டு மற்றும் சோம்பு
சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை இட்லி மாவுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* மாவானது மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் தேவையான அளவு அரிசி
மாவை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருளைக்கிழங்கு துண்டுகளை மாவில்
போட்டு பிரட்டி எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக
பொரித்து எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications









