Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
உருளைக்கிழங்கை வெச்சு இனிமே இப்படி கிரேவி செய்யுங்க.. உங்க குழந்தைங்க ஒரு சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க...
Potato Peas Gravy Recipe: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் எப்போதும் சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு சைடு டிஷ் தான் கேட்பார்களா?
அப்படியானால், எப்போதும் ஒரே மாதிரியான உருளைக்கிழங்கு சைடு டிஷ் செய்யாமல், இன்று உருளைக்கிழங்குடன், பட்டாணியை சேர்த்து கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி சப்பாத்திக்கு அட்டகாசமாக இருப்பதோடு, இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

முக்கியமாக இந்த உருளைக்கிழங்கு பட்டாணி கிரேவியை செய்து கொடுத்தால், ஒரு சப்பாத்தி சாப்பிடும் உங்கள் குழந்தை 2 சப்பாத்தி சாப்பிடுவார்கள். உங்களுக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே உருளைக்கிழங்கு பட்டாணி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கிரேவிக்கு...
* உருளைக்கிழங்கு - 3
* பச்சை பட்டாணி - 1 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* கிராம்பு - 2
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* தேங்காய் பால் - 1 - 1/2 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தேங்காய் பால் செய்வதற்கு...
* துருவிய தேங்காய் - 2 கப்
* வெதுவெதுப்பான நீர் - 1 கப்
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அவற்றை
துண்டுகளாக்கி, நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில், துருவிய தேங்காயைப் போட்டு, வெதுவெதுப்பான
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, வடிகட்டி தேங்காய் பாலை எடுத்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சீரகத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா,
மல்லித் தூள் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் உருளைக்கிழங்கு துண்டுகள் மற்றும் பச்சை பட்டாணியை
சேர்த்து சில நொடிகள் வதக்கி, பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் தேங்காய் பாலை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு உள்ளதா என்பதைப் பார்த்து, ஒரு கொதி விட்டு
இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி கிரேவி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications











