Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
இட்லி, தோசைக்கு பீர்க்கங்காயை வைச்சு இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... எவ்வளவு தோசை சுட்டாலும் பத்தாது...!
Peerkangai Chutney Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலையும், இரவும் பிரதான உணவாக இருப்பது இட்லி அல்லது தோசைதான். தினமும் இட்லி, தோசை செய்வது ஈஸியாக இருந்தாலும் அதற்கு ஏற்ற சரியான சைடிஷ் செய்வது என்பது எளிதான காரியமல்ல. இந்த பிரச்சினையை தீர்க்கத்தான் தொடர்ந்து பல்வேறு சட்னி ரெசிபிக்கள் நமது தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இட்லி, தோசைக்கான சைடிஷ் பிரச்சினையை தீர்க்கும் வகையில் இன்று நாம் பார்க்கப் போவது ஆரோக்கியமான பீர்க்கங்காய் சட்னியை எப்படி செய்வது என்பது பற்றிதான். பொதுவாக காய்கறிகளை வைத்து சாதத்திற்குத்தான் சட்னி செய்வோம். ஆனால் இந்த பீர்க்கங்காய் சட்னி சாதத்திற்கு மட்டுமின்றி இட்லி, தோசைக்கும் சூப்பரான சைடிஷாக இருக்கும்.

இந்த சட்னியை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்தால் அனைவருமே வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். குறிப்பாக காய்கறி சாப்பிடாத உங்கள் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக எடையைக் குறைக்க விரும்புவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பதிவில் பீர்க்கங்காயை வைத்து எப்படி சூப்பரான சட்னி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 1பீர்க்கங்காய்
- 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
- புளி சிறிதளவு
- 8 பச்சை மிளகாய்
- 1 சிட்டிகை பெருங்காயம்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- பீர்க்கங்காயைத் தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும், பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
- ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயத்துடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய பீர்க்கங்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- நன்றாகக் கலந்து, மூடி வைத்து 4 நிமிடங்கள் அல்லது பீர்க்கங்காய் மென்மையாகி, வேகும் வரை, அளவு குறையும் வரை சமைக்கவும்.
- இந்த கலவையை 2 நிமிடம் மூடிவைத்து பீர்க்கங்காய் நன்றாக வேகும் வரை காத்திருக்கவும்.
- இந்த கலவை முழுவதுமாக ஆறியவுடன், புளியுடன் சேர்த்து மென்மையாக அரைக்கவும். புளியை முன்னரே தண்ணீரில் ஊறவைத்து விடுவது நல்லது.
- பின்னர் சட்னியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும்.
- ஒரு சிறிய கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும் அதில் உளுந்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் இந்த தாளிப்பை சட்னி மீது ஊற்றி நன்கு கிளறவும்.
- கூடுதல் சுவைக்கு பீர்க்கங்காய் வதக்கும் போது அதில் சிறிது கொத்தமல்லி அல்லது புதினா சேர்த்து வதக்கவும்.
- இந்த பீர்க்கங்காய் சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications











