For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காரசார சுவையுள்ள பன்னீர் கேப்ஸிகம் சப்ஜி செய்யும் முறை !!

Posted By: R. SUGANTHI Rajalingam
|

பன்னீர் கேப்ஸிகம் சப்ஜி வட இந்தியாவில் முக்கியமாக செய்யப்படும் கறி ஆகும். தினமும் செய்யும் ரெசிபியில் கண்டிப்பாக இது அதிகமான தடவையை இடம் பெற்று விடும். இந்த பன்னீர் கேப்ஸிகம் மசாலா காரசாரமான குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை வதக்கி அப்படியே தக்காளி ஜூஸ் மசாலா சேர்த்து அதனுடன் சுவையான பன்னீர் துண்டுகளையும் சேர்த்து செய்யப்படும் ரெசிபி ஆகும்.

எந்த வீட்டை எடுத்தாலும் பன்னீர் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த சுவையான நாக்கை சப்பு கொட்ட வைக்கும் பன்னீர் மசாலா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். கடாய் பன்னீர் சைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான டிஷ்ஷாக உலகம் முழுவதும் பரவியுள்ளது. மென்மையாக பன்னீருடன், மொறு மொறுப்பான குடைமிளகாய் மற்றும் வதக்கிய வெங்காயம் மற்றும் உங்கள் நாவில் எச்சு ஊற வைக்கும் தக்காளி காரசாரமான மசாலா இவற்றையெல்லாம் சேர்த்து பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு மட்டுமல்ல உங்கள் வயிற்றிற்கும் விருந்தளிக்கும். கடாய் பன்னீர் ரொட்டி, நாண் போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட சுவையானதாக இருக்கும்.

பன்னீர் கேப்ஸிகம் சப்ஜி ரெசிபியை வீட்டிலேயே எளிதாக விரைவிலேயே செய்ய முடியும். ரெம்ப பிஸியான நாட்களில் கூட இதை எளிதாக செய்து ஒரு அசத்து அசத்திடலாம். சப்ஜி கிரேவியுடன் அல்லது கிரேவி இல்லாமலும் செய்யலாம். சரி வாங்க இப்பொழுது ட்ரை பன்னீர் கேப்ஸிகம் சப்ஜி செய்வது எப்படி என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

பன்னீர் கேப்ஸிகம் சப்ஜி வீடியோ ரெசிபி

paneer capsicum sabzi recipe
பன்னீர் கேப்ஸிகம் சப்ஜி ரெசிபி /கடாய் பன்னீர் ரெசிபி /பன்னீர் சிம்லா மிர்ச் சப்ஜி மசாலா செய்வது எப்படி /பன்னீர் கேப்ஸிகம் மசாலா
பன்னீர் கேப்ஸிகம் சப்ஜி ரெசிபி /கடாய் பன்னீர் ரெசிபி /பன்னீர் சிம்லா மிர்ச் சப்ஜி மசாலா செய்வது எப்படி /பன்னீர் கேப்ஸிகம் மசாலா
Prep Time
10 Mins
Cook Time
20M
Total Time
30 Mins

Recipe By: மீனா பந்தரி

Recipe Type: சைடிஸ்

Serves: 2 நபர்கள்

Ingredients
  • குடைமிளகாய் - 1

    வெங்காயம் - 1

    தக்காளி - 3

    தண்ணீர் - 11/2 கப்

    பூண்டு (தோலுரித்து) - 4 பல்

    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவைக்கேற்ப

    சிவப்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    பன்னீர் துண்டுகள் - 1 கப்

    கஸ்தூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன் +அலங்கரிக்க

Red Rice Kanda Poha
How to Prepare
    1. பெரிய குடைமிளகாயை எடுத்து இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
    2. உள்ளே உள்ள வெள்ளை பகுதிகளையும் விதைகளையும் நீக்கி விட வேண்டும்
    3. ரெம்பவும் மெல்லிசாக இல்லாமல் 2 அங்குலம் அளவிற்கு நீளமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
    4. பிறகு பெரிய வெங்காயத்தை எடுத்து அதன் மேல் மற்றும் கீழ் பகுதிகளை நீக்கி விட வேண்டும்.
    5. பிறகு அதன் தோலை உரித்து கடினமான மேல் பகுதியை நீக்கி விடவும்
    6. பிறகு பாதியாக வெட்டி நீளமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
    7. நன்றாக தனியாக உதிர்த்து விட்டு இன்னும் சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
    8. பிரஷ்ஷர் குக்கரில் தண்ணீர் சேர்க்க வேண்டும்
    9. அதில் தக்காளியை போட்டு ஒரு விசில் வேக விடவும்
    10. காற்று போன பிறகு மெதுவாக மூடியை திறக்க வேண்டும்
    11. பிறகு வேக வைத்த தக்காளியை எடுத்து ஒரு தட்டில் வைத்து 15 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்
    12. இப்பொழுது அதன் தோலை உரித்து விடவும்
    13. தோலுரித்த தக்காளியை மிக்ஸியில் போடவும்
    14. அதனுடன் பூண்டையும் சேர்த்து நன்றாக வழுவழுவென அரைத்து கொள்ளவும்
    15. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்
    16. அதில் சீரகம் போட்டு வெடிக்க விட வேண்டும்
    17. வெட்டிய வெங்காயத்தை போட்டு 2-3 நிமிடங்கள் அதிகமான தீயில் பொன்னிறமாக வதக்க வேண்டும்
    18. அதனுடன் நறுக்கிய குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்
    19. 2 நிமிடங்கள் அப்படியே சமைக்க வேண்டும்
    20. இப்பொழுது அரைத்த தக்காளி ஜூஸை அதில் ஊற்றவும். நன்றாக கலக்கவும்
    21. ஒரு நிமிடம் வரை சமைக்க வேண்டும்
    22. உப்பு, சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்
    23. இப்பொழுது பன்னீர் துண்டுகளை சேர்க்க வேண்டும்
    24. கஸ்தூரி மெத்தி சேர்த்து நன்றாக கிளறவும்
    25. மூடியை கொண்டு மூடி ஒரு நிமிடம் வரை சமைக்க வேண்டும்
    26. இது முடிந்த பிறகு ஒரு பெளலிற்கு கிரேவியை மாற்றி விடவும்
    27. அதன் மேல் கஸ்தூரி மெத்தியை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
    28. சூடாக பரிமாறவும்

Instructions
  • 1. குடை மிளகாயை ரெம்பவும் மெல்லியதாக வெட்ட வேண்டாம். உங்கள் வாயிற்கு மொறு மொறுப்பாக இருக்கும் படி இருந்தால் போதும்.
  • 2. அடுப்பில் தீயானது இந்த செய்முறை யின் போது அதிகமாக இருக்க வேண்டும்
  • 3. குடைமிளகாயை ரெம்ப வேக வைக்கக் கூடாது. அப்படி செய்தால் அது மொறு மொறுப்பு தன்மையை இழந்து விடும்.
  • 4. பன்னீர் துண்டுகளாக மார்க்கெட்டில் வாங்கினாலும் சரி அல்லது பன்னீர் பாக்கெட் வாங்கி அதை துண்டுகளாக வெட்டியும் பயன்படுத்தி கொள்ளலாம்.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1 கப்
  • கலோரிகள் - 130
  • கொழுப்பு - 8 கிராம்
  • புரோட்டீன் - 3 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 13 கிராம்
  • சுகர் - 5 கிராம்
  • நார்ச்சத்து - 3 கிராம்

படத்துடன் செய்முறை விளக்கம் : பன்னீர் கேப்ஸிகம் சப்ஜி செய்வது எப்படி

1. பெரிய குடைமிளகாயை எடுத்து இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்

2. உள்ளே உள்ள வெள்ளை பகுதிகளையும் விதைகளையும் நீக்கி விட வேண்டும்

3. ரெம்பவும் மெல்லிசாக இல்லாமல் 2 அங்குலம் அளவிற்கு நீளமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

4. பிறகு பெரிய வெங்காயத்தை எடுத்து அதன் மேல் மற்றும் கீழ் பகுதிகளை நீக்கி விட வேண்டும்.

5. பிறகு அதன் தோலை உரித்து கடினமான மேல் பகுதியை நீக்கி விடவும்

6. பிறகு பாதியாக வெட்டி நீளமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்

7. நன்றாக தனியாக உதிர்த்து விட்டு இன்னும் சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்

8. பிரஷ்ஷர் குக்கரில் தண்ணீர் சேர்க்க வேண்டும்

9. அதில் தக்காளியை போட்டு ஒரு விசில் வேக விடவும்

10. காற்று போன பிறகு மெதுவாக மூடியை திறக்க வேண்டும்

11. பிறகு வேக வைத்த தக்காளியை எடுத்து ஒரு தட்டில் வைத்து 15 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்

12. இப்பொழுது அதன் தோலை உரித்து விடவும்

13. தோலுரித்த தக்காளியை மிக்ஸியில் போடவும்

14. அதனுடன் பூண்டையும் சேர்த்து நன்றாக வழுவழுவென அரைத்து கொள்ளவும்

15. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

16. அதில் சீரகம் போட்டு வெடிக்க விட வேண்டும்

17. வெட்டிய வெங்காயத்தை போட்டு 2-3 நிமிடங்கள் அதிகமான தீயில் பொன்னிறமாக வதக்க வேண்டும்

18. அதனுடன் நறுக்கிய குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்

19. 2 நிமிடங்கள் அப்படியே சமைக்க வேண்டும்

20. இப்பொழுது அரைத்த தக்காளி ஜூஸை அதில் ஊற்றவும். நன்றாக கலக்கவும்

21. ஒரு நிமிடம் வரை சமைக்க வேண்டும்

22. உப்பு, சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்

23. இப்பொழுது பன்னீர் துண்டுகளை சேர்க்க வேண்டும்

24. கஸ்தூரி மெத்தி சேர்த்து நன்றாக கிளறவும்

25. மூடியை கொண்டு மூடி ஒரு நிமிடம் வரை சமைக்க வேண்டும்

26. இது முடிந்த பிறகு ஒரு பெளலிற்கு கிரேவியை மாற்றி விடவும்

27. அதன் மேல் கஸ்தூரி மெத்தியை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

28. சூடாக பரிமாறவும்

[ 3.5 of 5 - 27 Users]
Read more about: மசாலா சைவம்
English summary

Paneer Capsicum Sabzi Recipe | Kadai Paneer Recipe | How To Make Paneer Shimla Mirch Sabzi | Paneer Capsicum Masala

Paneer capsicum sabzi is a popular North Indian curry. Watch the video on how to make the kadai paneer. Also, read the step-by-step procedure with images.
Desktop Bottom Promotion