Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
வெங்காய சட்னி
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் தேங்காய் சட்னி செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் வெங்காய சட்னியை செய்யுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் தேங்காய் சட்னி செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் வெங்காய சட்னியை செய்யுங்கள். இந்த வெங்காய சட்னி செய்வதற்கு தக்காளி, தேங்காய் என்று எதுவுமே தேவைப்படாது. மேலும் இந்த சட்னி வெங்காய பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு வெங்காய சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
* பூண்டு - 1-2 பல் (நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் - 2-3
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* புளி - ஒரு சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் காஷ்மீரி மிளகாய் சேர்த்து சில நொடிகள் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வதக்கியதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் புளி சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அரைத்ததை சேர்த்து குறைவான தீயில் வைத்து, வேண்டுமானால் சிறிது நீர் ஊற்றி கிளறி இறக்கினால், சுவையான வெங்காய சட்னி தயார்.
Image Courtesy: vegrecipesofindia



Click it and Unblock the Notifications












