For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காஷ்மீரி மிர்ச்சி குருமா: ரமலான் ஸ்பெஷல்

By Maha
|

ரமலான் மாதத்தில் முஸ்லீம்கள் பலரும் காலை நோன்பு ஆரம்பிக்கும் முன் அல்லது நோன்பு முடித்த பின், அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். அதிலும் மட்டனில் புரோட்டீன் அதிகம் இருப்பதாலும், உடலுக்கு குளிர்ச்சி என்பதாலும், நோன்பு காலத்தில் மட்டனை சமைத்து சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு மட்டனில் வித்தியாசமான, அதே சமயம் விரைவில் செய்யக்கூடியதுமான ஒரு காஷ்மீரி ரெசிபியை தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது. அது தான் காஷ்மீரி மிர்ச்சி குருமா. சரி, இப்போது அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

Ramadan Special: Kashmiri Mirchi Korma Recipe

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1 கிலோ
வரமிளகாய் - 10
வெங்காயம் - 3
பட்டை - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மட்டன் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
புளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வாக்கி, பின் மட்டனை சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும்.

அடுத்து அதில் பட்டை, ஏலக்காய், சோம்பு பொடி, சீரகப் பொடி மற்றும் மட்டன் மசாலா சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி, பின் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிது நீரை ஊற்றி, அதில் விதைகளை நீக்கிய வரமிளகாய்களை போட்டு, மென்மையாக வேக வைத்து இறக்கி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, பின் மிளகாயை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு மிளகாய் பேஸ்ட் உடன் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து, அதனை குக்கரில் உள்ள மட்டனுடன் சேர்த்து பிரட்டி, பச்சை வாசனை நீங்கி, மட்டனுடன் மசாலா அனைத்து ஒன்று சேர நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், காஷ்மீரி மிர்ச்சி குருமா ரெடி!!!

English summary

Ramadan Special: Kashmiri Mirchi Korma Recipe

Kashmiri mirchi korma is the best among korma curry dishes. Try this yummy dish in Ramadan. To make mirchi korma have a look at this simple korma recipe.
Story first published: Saturday, June 20, 2015, 13:37 [IST]
Desktop Bottom Promotion