நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்

Posted By:
Subscribe to Boldsky
Nattukkozhi pepper chicken fry
மழைக்காலத்தில் ஜலதோஷம், சளி தாக்குதல் அதிகமாய் இருக்கும். வீட்டில் பெரியவர்கள் நாட்டுகோழிக்கறி சூப் சாப்பிட்டால் சளி எட்டிப்பார்க்காது என்று கூறுவார்கள். சூப் குடித்த பின்னர் இருக்கும் சிக்கனில் மிளகு போட்டு வறுவல் செய்து சாப்பிட்டால் அதன் சுவையே அலாதிதான்.

தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி - ஒரு கிலோ ( பெரிய துண்டுகளாக வெட்டவும்)

பெரியவெங்காயம் - 3 ( நீளமாக நறுக்கவும்)

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - இரண்டு ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 5

மிளகுதூள் - 4 டீ ஸ்பூன்

சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சை சாறு - 2 டீ ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

நாட்டுக்கோழி மிளகு வறுவல் செய்முறை

நாட்டுக்கோழியை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். இதை தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 6 விசில் வரை விட்டு வேகவைக்கவும். நன்றாக வெந்தால்தான் சிக்கன் பஞ்சுபோல ஆகும். விசில் இறங்கிய உடன் சிக்கனை எடுத்துவிட்டு மீதமுள்ள

தண்ணீரை சூப் போல குடிக்கலாம் சளி நீங்கும்.

வெந்த சிக்கனை கை பொறுக்கும் சூட்டில் சின்ன சின்ன பீஸாக எடுத்து தட்டில் வைக்கவும்.அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காயவைக்கவும். கறிவேப்பிலை போட்டு தாளித்த உடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். இத்துடன் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

நன்றாக வதக்கிய உடன் காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும். இதனுடன் சிக்கனைப் போட்டு கிளறவும் நன்றாக ப்ரை செய்யவேண்டும். இந்த கலவையில் சீரகத்தூள், பெப்பர் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். தேவைக் கேற்ப உப்பு சேர்த்துக்கொள்ளலாம். சுவையான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வருவல் தயார். இது மழைக்காலத்திற்கு ஏற்ற சூப்பரான சைடு டிஷ்.

English summary

Nattukkozhi pepper chicken fry | நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்

Chicken Pepper Fry Recipe made easy, learn how to make Chicken Pepper Fry Recipes at home.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter