காரசாரமான.... மட்டன் சுக்கா

Posted By:
Subscribe to Boldsky

எப்போதும் மட்டனை குழம்பு, வறுவல் என்று செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியெனில் உங்களுக்காக தமிழ் போல்ட் ஸ்கை தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான, அதே சமயம் காரசாரமாக இருக்கும் ஒரு மட்டன் ரெசிபியைக் கொடுத்துள்ளது. அந்த ரெசிபியின் பெயர் மட்டன் சுக்கா. இந்த மட்டன் சுக்காவானது சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

உங்களுக்கு அந்த மட்டன் சுக்காவை எப்படி செய்வதென்று தெரியாவிட்டால், இங்கு அந்த ரெசிபியின் வீடியோ கொடுக்கப்பட்டிருப்பதுடன், அதன் செய்முறையும் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத மட்டன் - 1 கிலோ

வெங்காயம் - 5 (நறுக்கியது)

தக்காளி - 4 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (நீளமாக நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிது

வரமிளகாய் - 4

மிளகு - 2 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

ஏலக்காய் - 2

பட்டை - 1 இன்ச்

கிராம்பு - 4

சீரகம் - 1 டீஸ்பூன்

மல்லி - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

Boneless Mutton Sukka: A Spicy Treat

செய்முறை:

முதலில் மட்டன் நன்கு நீரில் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை குக்கரில் போட்டு, 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, 6-7 விசில் விட்டு இறக்கி கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, சோம்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, சீரகம் மற்றும் மல்லி சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலா பொடியில் பாதியை சேர்த்து, அத்துடன் தக்காளியை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

பின்னர் குக்கரில் உள்ள மட்டன் துண்டுகளை வாணலியில் சேர்த்து, குக்கரில் உள்ள மட்டன் நீரில் பாதியை ஊற்றி, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

இறுதியில் மீதமுள்ள மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், காரசாரமான மட்டன் சுக்கா ரெடி!!!

English summary

Boneless Mutton Sukka: A Spicy Treat

Boneless mutton sukka is a recipe that works for everyone. With this video you can make mutton sukka recipe in minutes.
Story first published: Tuesday, September 23, 2014, 13:18 [IST]
Subscribe Newsletter