For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு

By Maha
|

ஆந்திரா ஸ்டைலில் செய்யப்படும் சாதாரண மட்டன் குழம்பிற்கும், கோங்குரா என்னும் புளிச்சக்கீரை கொண்டு செய்யப்படும் மட்டன் குழம்பிற்கும் சுவையில் நிறைய வித்தியாசம் உள்ளது. புளிச்சக்கீரை மட்டன் குழம்பானது மிகவும் சுவையாகவும், காரமாகவும் இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட.

இங்கு ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன் படி செய்து சுவைத்து மகிழுங்கள்.

Andhra Style Gongura Mutton Curry Recipe

தேவையான பொருட்கள்:

புளிச்சக்கீரை - 1 கட்டு (நறுக்கியது)
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 3-4
கிராம்பு - 2-3
பட்டை - 1 இன்ச்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் புளிச்சக்கீரையை சுத்தம் செய்து, நீரில் அலசி தனியா வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், புளிச்சக்கீரையை சேர்த்து வதக்க வேண்டும்.

பின்பு அதனை மூடி வைத்து, 4-5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மட்டன் துண்டுகளை சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின் அதில் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 3-4 நிமிடம் வேக வைத்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி குறைவான தீயில் 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசில் போனதும், குக்கரை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் புளிச்சக்கீரையை நன்கு மசித்து சேர்த்து கிளறி மூடி வைத்து 3-4 நிமிடம் வேக வைத்து, பின் கரம் மசாலா சேர்த்து பிரட்டி இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு ரெடி!!!

English summary

Andhra Style Gongura Mutton Curry Recipe

Check out this amazing Andhra style gongura mutton curry recipe. The gongura mutton curry is recipe is actually a variation of the normal Andhra mutton curry.
Story first published: Saturday, December 27, 2014, 17:54 [IST]
Desktop Bottom Promotion