தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க..

Posted By:

No Coconut Vellai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் பெரும்பாலும் செய்வீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பெரும்பாலும் தேங்காய் சட்னியை தான் வீட்டில் செய்வீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் தேங்காய் இல்லையா? அப்படியானால் கவலைப்படாதீர்கள்.

தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரான சுவையில் தேங்காய் சட்னியை செய்யலாம். ஆனால் இந்த சட்னி பார்க்க தேங்காய் சட்னி போன்று தென்பட்டாலும், சுவை வித்தியாசமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். ஏனெனில் அந்த அளவில் இதன் சுவை இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

No Coconut Vellai Chutney How To Make a No Coconut Chutney Recipe

உங்களுக்கு இந்த தேங்காய் சேர்க்காத வெள்ளை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் சேர்க்காத வெள்ளை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* சின்ன வெங்காயம் - 150 கிராம்
* பூண்டு - 4 பல்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வறுத்த வேர்க்கடலை - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, புளியின் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் பெருங்காயத் தூள், வறுத்த வேர்க்கடலை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தேங்காய் இல்லாத வெள்ளை சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, March 18, 2025, 7:00 [IST]
Desktop Bottom Promotion