தேங்காய் இல்லாமலேயே தேங்காய் சட்னியை செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க...

Posted By:

No Coconut Chutney Recipe In Tamil: ஒவ்வொரு நாள் காலையிலும் என்ன டிபன் செய்வதென்று யோசித்து செய்வதே பெரிய சவாலாக உள்ளதா? எப்போதும் உங்கள் வீட்டில் காலையில் இட்லி அல்லது தோசை தான் செய்வீர்களா? அதற்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி செய்து போரத்துவிட்டதா?

சற்று வித்தியாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் தேங்காய் சேர்க்காமல் செய்யக்கூடிய தேங்காய் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருப்பதோடு, வித்தியாசமான சுவையிலும் இருக்கும்.

No Coconut Chutney Recipe

உங்களுக்கு தேங்காய் இல்லாமலேயே தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் இல்லாமலேயே செய்யக்கூடிய தேங்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

MOST READ: டயட்-ல இருக்கீங்களா? அப்ப ஓட்ஸை வெச்சு இப்படி தோசை செஞ்சு சாப்பிடுங்க.. சூப்பரா இருக்கும்...

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)

MOST READ: சின்ன வெங்காயம், வரமிளகாய் வெச்சு இப்படி சட்னி செய்யுங்க.. 1 இட்லி சாப்பிடுறவங்க 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில், வதக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், பொட்டுக்கடலை, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த பேஸ்ட் மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி கலந்தால், சட்னி தயார்.

Image Courtesy: cookerypark

[ of 5 - Users]
Story first published: Friday, January 5, 2024, 7:03 [IST]
Desktop Bottom Promotion