Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
டயட்-ல இருக்கீங்களா? அப்ப ஓட்ஸை வெச்சு இப்படி தோசை செஞ்சு சாப்பிடுங்க.. சூப்பரா இருக்கும்...
Oats Dosa Recipe In Tamil: நீங்க டயட்ல இருக்கீங்களா? அடிக்கடி ஓட்ஸை காலை உணவா சாப்பிடுவீங்களா? ஓட்ஸை எப்படி சாப்பிட்டாலும் பிடிக்கவில்லையா? அப்படியானால் ஓட்ஸை வெச்சு தோசை செஞ்சு சாப்பிடுங்கள்.
ஓட்ஸ் தோசை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, மிகவும் ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இது ரவை தோசை போன்று இருப்பதால், நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த ஓட்ஸ் தோசைக்கு தேங்காய் சட்னி அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ஓட்ஸ் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஓட்ஸ் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஓட்ஸ் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* அரிசி மாவு - 1/4 கப்
* ரவை - 1/4 கப்
* பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
* துருவிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 1/4 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - 1 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஓட்ஸை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து பொடி செய்து
கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த ஒட்ஸ் பொடியை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன்
சீரகம், அரிசி மாவு, ரவை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி,
துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், தயிர் மற்றும் தேவையான அளவு
நீரை ஊற்றி நன்கு நீர் போன்று கலந்து கலந்து கொள்ள வேண்டும். தோசை
மாவானது ரவா தோசை பதத்தில் மிகவும் நீராக இருக்க வேண்டும்.
* பின் அந்த மாவை 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, பேன் நன்கு சூடானதும்,
அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்ற வேண்டும். அதன் பின் அதன்
மேல் எண்ணெய் ஊற்றி, மொறுமொறுப்பாக வந்ததும், தோசையை எடுக்க வேண்டும்.
இதே போல் அனைத்து மாவையும் தோசைகளாக ஊற்றி எடுத்தால், சுவையான ஓட்ஸ்
தோசை தயார்.
Image Courtesy: indianhealthyrecipes



Click it and Unblock the Notifications
