1 கட்டு கொத்தமல்லியும், வெங்காயமும் இருந்தா.. 15 நிமிஷத்துல தொக்கு செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..

Posted By:

Kothamalli Vengaya Thokku Recipe In Tamil: எப்போதும் இட்லி, தோசை செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷை முடிவு செய்வது தான் கஷ்டமாக இருக்கும். அதுவும் தினமும் ஒரே மாதிரியான சட்னியை செய்தால் போரடித்துவிடும். எனவே அவ்வப்போது சற்று வித்தியாசமாக செய்தால் தான் இட்லி, தோசையை கூட சாப்பிட முடியும்.

அந்த வகையில் இட்லி, தோசைக்கு ஒரு சூப்பரான அதே சமயம் 4-5 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் ஒரு சூப்பரான தொக்கு தான் கொத்தமல்லி வெங்காய தொக்கு. இந்த தொக்கு செய்வது மிகவும் சுலபம். மேலும் இது இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

Kothamalli Vengaya Thokku How To Make a Coriander Onion Thokku Recipe

உங்களுக்கு கொத்தமல்லி வெங்காய தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி வெங்காய தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2
* சின்ன வெங்காயம் - 15
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* கல் உப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 1 கட்டு
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு வெந்தய பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு மற்றும் வெந்தயத்தை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பெரிய மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் புளி, கல் உப்பு, பெருங்காயத் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து நன்கு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கொத்தமல்லியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்ததை சேர்த்து, நன்கு எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* எண்ணெய் பிரியத் தொடங்கியதும், அதில் அரைத்து வைத்துள்ள கடுகு வெந்தய பொடியை சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான கொத்தமல்லி வெங்காய தொக்கு தயார்.

Image Courtesy: SIMPLY SAMAYAL

[ of 5 - Users]
Story first published: Sunday, August 4, 2024, 21:53 [IST]
Desktop Bottom Promotion