Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
கேரளா ஸ்டைல் பச்சை பட்டாணி கிரேவி
சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை பட்டாணி உள்ளதா? அப்படியானால் அந்த பச்சை பட்டாணியைக் கொண்டு தேங்காய் பால் சேர்த்து ஒரு அட்டகாசமான கிரேவி செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை பட்டாணி உள்ளதா? அப்படியானால் அந்த பச்சை பட்டாணியைக் கொண்டு தேங்காய் பால் சேர்த்து ஒரு அட்டகாசமான கேரளா ஸ்டைல் பச்சை பட்டாணி கிரேவி செய்யுங்கள். இந்த பட்டாணி கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இந்த பச்சை பட்டாணி கிரேவி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு கேரளா ஸ்டைல் பச்சை பட்டாணி கிரேவி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பட்டாணி - 1 1/2 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 இன்ச்
* பூண்டு - 2 பல்
* இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* கெட்டியான தேங்காய் பால் - 1/2 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பச்சை பட்டாணியை குக்கரில் போட்டு, ஒரு கப் நீரை ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கி வையுங்கள்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைக்க வேண்டும்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி விழுதை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கப் நீரை ஊற்றி மிதமான தீயில் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பச்சை வாசனை போனதும், வேக வைத்துள்ள பட்டாணியை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக கரம் மசாலா மற்றும் தேங்காய் பால் ஊற்றி கிளறி 3-4 நிமிடம் கொதிக்க விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கேரளா ஸ்டைல் பச்சை பட்டாணி கிரேவி தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications











