Latest Updates
-
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி செய்து போரடிச்சுடுச்சா? அப்ப இனி கத்திரிக்காய் கொஸ்து செய்யுங்க...
Brinjal Gosthu Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? எப்போதும் இட்லிக்கு சாம்பார், சட்னி செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காயைக் கொண்டு கத்திரிக்காய் கொஸ்து செய்யுங்கள்.
இந்த கத்திரிக்காய் கொஸ்து இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இந்த கொஸ்து செய்து மிகவும் ஈஸி. வேலைக்கு செல்பவர்கள் செய்வதற்கு ஏற்ப மிகவும் சுலபமாக இருக்கும். முக்கியமாக கத்திரிக்காய் பிடிக்காதவர்களுக்கு இந்த மாதிரி கத்திரிக்காயை சமைத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு கத்திரிக்காய் கொஸ்து எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் கொஸ்து ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் - 5
* தக்காளி - 2
* சின்ன வெங்காயம் - 10
* பச்சை மிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* புளிச்சாறு - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் கத்திரிக்காயை கழுவி, சிறு துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் குக்கரில் கத்திரிக்காய், சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை
மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் புளிச்சாறு ஊற்ற வேண்டும்.
* அதன் பின் கத்திரிக்காய் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, அடுப்பில்
வைத்து, குக்கரை மூடி, 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, ஒரு மத்து கொண்டு கத்திரிக்காயை
மசித்து விட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை,
வரமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு நிறம் மாற வதக்கி
இறக்கி, கத்திரிக்காயுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான கத்திரிக்காய்
கொஸ்து தயார்.
குறிப்பு:
* கத்திரிக்காய் கொஸ்து செய்வதற்கு வெள்ளை கத்திரிக்காயை விட ஊதா நிற கத்திரிக்காய் பயன்படுத்தினால், சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
* உங்களுக்கு பச்சை மிளகாய் சேர்க்க விருப்பமில்லை என்றால், குழம்பு மிளகாய் தூயை 1/2 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.
Image Courtesy: Rani's Treat



Click it and Unblock the Notifications











