Latest Updates
-
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க..
காரைக்குடி பூண்டு மிளகு குழம்பு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு பாருங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்!
Karaikudi Poondu Milagu Kulambu Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் சாம்பார் அல்லது புளிகுழம்புதான் தினமும் மதியம் பிரதான குழம்பாக இருக்கும். ஒரே மாதிரியான புளிக்குழம்பு, சாம்பார் செய்வது சாப்பிடுபவர்களுக்கு மட்டுமின்றி சமைப்பவர்களுக்கும் நாளடைவில் போரடித்து விடும். அப்படியானால் ஒரு நாள் காரைக்குடி ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். குறிப்பாக செட்டிநாடு ஸ்டைல் பூண்டு மிளகு குழம்பை முயற்சி செய்து பாருங்கள். ஏனெனில் பூண்டு என்பது அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் ஒரு அத்தியாவசிய பொருளாகும்.
இந்த பூண்டு மிளகு குழம்பு சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட. ஏனென்றால் இதில் சேர்க்கப்படும் பூண்டு, மிளகு இரண்டுமே ஆரோக்கியத்தில் பல அதிசயங்களை செய்யக்கூடிய பொருட்களாகும். இந்த பூண்டு மிளகு குழம்பை ஒரு தடவை வைத்து விட்டால் போதும் 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். இதை சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்.

உங்களுக்கு காரைக்குடி பூண்டு மிளகு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரைக்குடி பூண்டு மிளகு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்த அரைக்க:
- ஒன்றை ஸ்பூன் மிளகு
- 2 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
- ஒன்றரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- ஒன்றரை டீஸ்பூன் துவரம் பருப்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 4 வர மிளகாய்
- ½ டீஸ்பூன் வெந்தயம்
- ¼ கப் கறிவேப்பிலை
- ¼ டீஸ்பூன் பெருங்காயம்
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
குழம்பு வைக்க:
- 10-15 பூண்டு பல்
- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- ¼ ஸ்பூன் பெருங்காயம்
- ஒன்றரை ஸ்பூன் கெட்டியான புளி விழுது
- 2 ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, கருப்பு மிளகு, வெந்தயம், வர மிளகாய், கொத்தமல்லி விதைகள் சேர்த்து குறைந்த தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- மசாலா பொருட்கள் வாசனை வந்து பொன்னிறமாக மாறியதும், சீரகம் மற்றும் பெருங்காயம் சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் 2 கொத்து கறிவேப்பில்லை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- இறுதியாக உப்பு சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- நன்றாக ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- பின்னர் அதே கடாயில், 2 ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கவும். பின்னர் கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் பெருங்காயம் மற்றும் உரித்த பூண்டு பற்களை சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கவும், பின்னர் கறிவேப்பிலையை சேர்க்கவும்.
- பின்னர் அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.
- பின் கலவையில் மஞ்சள் தூள், புளி விழுது மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
- தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும் நன்கு கிளறவும்
- நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
- உங்கள் தேவைக்கேற்ற தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்து நன்றாக கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான காரைக்குடி பூண்டு மிளகு குழம்பு ரெடி. இதை சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











