Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...!
நோஸ்ட்ராடமஸ் தீர்க்கதரிசனத்தின் படி 2026-ல் உலகம் சந்திக்கப்போகும் மோசமான பேரழிவுகள் என்னென்ன தெரியுமா?
எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது எப்போதுமே ஆர்வத்தைக் கொடுக்கும் ஒரு விஷயமாகும். வரலாற்றில் எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்த பல தீர்க்கதரிசிகள் இருந்துள்ளனர். அதில் நோஸ்ட்ரடாமஸ் மற்றும் பாபா வாங்கா இருவரும் மிகவும் முக்கியமானவர்கள். நோஸ்ட்ராடாமஸின் பல கணிப்புகள் நிஜமாகி உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 2026 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே உலகில் ஒரு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் அவரின் கணிப்புகள் பற்றி மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ளன.
உக்ரைன்-ரஷ்யா போர், உலக நாடுகளின் பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதால், நோஸ்ட்ராடாமஸின் 500 ஆண்டுகள் பழமையான கணிப்புகள் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. நோஸ்ட்ரடாமஸின் இதுவரை பலித்துள்ள தீர்க்கதரிசனங்கள் போல அவருடைய 2026 ஆம் ஆண்டுக்கான தீர்க்கதரிசங்களும் உண்மையாகிவிட்டால், உலகம் ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். 2026-ல் உலகம் என்னென்ன ஆபத்துகளை சந்திக்கலாம் என்று நோஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மூன்றாம் உலகப்போர்
2026 ஆம் ஆண்டுக்கான நோஸ்ட்ராடாமஸின் முதல் தீர்க்கதரிசனத்தின்படி, மூன்றாம் உலகப் போர் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கலாம், அது உலகம் முழுக்க மிகவும் பேரழிவை ஏற்படுத்தும். மதம் மற்றும் தேசியவாதத்தின் பெயரால் மக்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. உலகின் கிழக்கு நாடுகளில் இதுபோன்ற நிலைமை ஏற்கனவே எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவால் இந்த வருடத்தில் இன்னும் என்னென்ன சிக்கல்கள் எழுமோ என்ற அச்சம் உலகின் பல நாடுகளில் நிலவுகிறது.
கடற்படைப் போர்
2026 ஆம் ஆண்டில் ஒரு பெரிய கடற்படை போர் அல்லது கடல்சார் சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தக்கூடும் என்று அவரது தீர்க்கதரிசங்கள் கூறுகின்றன. நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, ஒரு மிகப் பெரிய கப்பல் மூழ்கலாம் அல்லது ஒரு கடற்படைப் போர் தொடங்கலாம். ஒரு சக்திவாய்ந்த நாட்டின் தவறான முடிவு திடீரென கடல்சார் பதட்டங்களை அதிகரிக்கக்கூடும், இது முக்கிய நாடுகளுக்கு இடையே மோதலுக்கு வழிவகுக்கும். நோஸ்ட்ராடாமஸின் வசனங்களின் பகுதிகளின்படி, ஒரு கப்பல் கடலில் மூழ்கும் நாளில், கடலின் சக்தி உலக அரசியலை மாற்றும்.
பொருளாதார நெருக்கடி
2026 ஆம் ஆண்டிற்கான நோஸ்ட்ராடாமஸின் அடுத்த தீர்க்கதரிசனம், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முக்கிய உலக வல்லரசுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும், இது சமூக அமைதியின்மையைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வல்லரசு நாடுகள் பணவீக்கத்தையும் எதிர்கொள்ளும், மேலும் இந்த நெருக்கடி பல உலகத் தலைவர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
இயற்கைப் பேரழிவுகள்
நோஸ்ட்ராடாமஸின் மற்றொரு தீர்க்கதரிசனத்தின் படி, 2026 ஆம் ஆண்டில் கடுமையான வெப்பம் பல இடங்களை பாலைவனங்களாக மாற்றக்கூடும். இதன் பிறகு, திடீரெனவும் பலத்த மழையும் பெய்யும், இதனால் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்படும். இந்த ஆண்டு அழிவின் ஆண்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதிகப்படியான மழைப்பொழிவு, நீர் மட்டங்கள் உயர்வு போன்ற இயற்கைப் பேரழிவுகள் சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
அணு ஆயுத தாக்குதல்
நோஸ்ட்ராடாமஸின் மற்றொரு ஆபத்தானதீர்க்கதரிசனம் 2026 இல் ஒரு அணு ஆயுத தாக்குதல் மற்றும் மனித விண்வெளித் திட்டங்களின் சரிவை சுட்டிக்காட்டுகிறது. செவ்வாய் கிரகத்தில் இருள் அதிகரிக்கும் என்றும், ஒரு பெரிய நாடு அணு ஆயுத தாக்குதலுக்கு தயாராகும் என்றும் அது கூறுகிறது.
உலகளாவிய உணவு தானியங்களின் விலை உயர்வு
நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனங்களில் ஒன்று உலகளாவிய தானிய விலை அதிகரிப்பைப் பற்றியதாகும். 2022 ஆம் ஆண்டில், கோதுமை விலை மிக உயர்ந்த நிலையை எட்டின, இது முழு உலகத்தையும், குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளையும் பாதித்தது. 2022 ஆம் ஆண்டில் தானிய விலை உயர்வை நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனத்துடன் மக்கள் இணைக்கின்றனர். நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனத்தில் குறிப்பிட்ட தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், மக்கள் இந்த கணிப்பைப் பற்றி அச்சத்தில் உள்ளனர்.



Click it and Unblock the Notifications












