Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
வெண்டைக்காயை சரியான பதத்தில் எப்படி சமைக்கணும்? இதோ டிப்ஸ்..!
நம் நாட்டில் ஆண்டு முழுவதும் பயிரிடப்பட்டு கிடைக்கும் காய்களில் முக்கியமானது வெண்டைக்காய். மிகவும் ஆரோக்கியமான காய்களில் ஒன்றாகும். ஆனால் இந்த காயை ஒவ்வொரு வீட்டிலும் செய்யும் முறை வித்தியாசமானதாக இருக்கிறது. வெண்டைக்காய் சுவையானது மட்டுமல்ல, உடலுக்கு பல நன்மைகளையும் தருகிறது.
பெரும்பாலான வீடுகளில் இந்த வெண்டைக்காயை சாம்பாராகதான் வைக்கின்றனர். சிலர் பொரியல், வறுவல் என சமைத்து சாப்பிடுகின்றனர். ஆனால் அப்படி சமைக்கும் போது வெண்டைக்காய் பிசுபிசுவென இருக்கும்.. அதனை நறுக்கும்போதும் வள வளபாகவே இருக்கும்.. இதனால் அதிகமாக சிறுவர்கள் இதை உட்கொள்ளமாட்டார்கள்.. அதனால் வெண்டைக்காயை பிசு பிசுவென இல்லாமல் செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

வெண்டைக்காயின் நன்மைகள்
வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட்ஸ் குறைவாக உள்ளது மற்றும் வைட்டமின் சி மற்றும் கே1 அதிகம் உள்ளது. மற்ற காய்களுடன் ஒப்பிடும் போது புரதம் குறைவாக கொண்டது. ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த வெண்டைக்காய் அதனுள் தடிமனான ஜெல் போன்ற பொருளைக் கொண்டுள்ளது. இதிலிருக்கும் பிசுபிசுப்பான பொருள் வெண்டைக்காயை கேட் செய்வதையும், சமைப்பதையும் சற்று கடினமாக்குகிறது. ஒரு சிலருக்கு வெண்டைக்காயை சாம்பாரில் போட்டால் பிடிக்காது ஆனால் பொரியல் செய்தல் சாப்பிடுவார்கள். இதற்கு காரணமும் அதன் பிசுபிசுப்பு தன்மை தான்.
வெண்டைக்காயை சமைக்கும் போது மனதில் கொள்ள வேண்டியவை
1. முதலில் வெண்டைக்காயை வாங்கும் போததே பிஞ்சு வெண்டைக்காயாகவும் சிறியதாகவும், முத்தலாக இல்லாமல் மிருதுவாகவும், நடுவில் இருந்து உடைய கூடியதாகவும் இருப்பதை தேர்வு செய்ய வேண்டும். பழுப்பு நிற புள்ளிகள் அல்லது கறைகள் உள்ள காயை வாங்க கூடாது..
2. நீங்கள் வெண்டைக்காயை வாங்கிய உடன் அவற்றை ஒரு பேப்பர் அல்லது ஜிப் பவுச்சில் வைத்து போர்த்தி ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இதை 3-4 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைக்கலாம். நறுக்கிய வெண்டைக்காய்களை ஸ்டோர் செய்ய விரும்பினால், அதற்கு ஜிப் பவுச்சை பயன்படுத்தி கொள்ளலாம்.
3.வெண்டைக்காயை சமைப்பதற்கு முன் கழுவி வெட்டினால் அது குழையும். ஏனெனில் தண்ணீர் அதன் குழையும் தன்மையை அதிகரிக்கிறது. எனவே வெண்டையை சமைக்கும் முன் கழுவ வேண்டாம். நறுக்கியபின் கழுவி உப்பு போட்டு வதக்கினால் நன்றாகமிருக்கும்.. மெல்லிய துண்டுகளாக வெட்டுவதை விட பெரிய துண்டுகளாக வெண்டைக்காய்களை வெட்டுவது எப்போதும் சிறந்தது.
4. வெண்டையின் குழையும் தன்மையை குறைக்க சமைப்பதற்கு முன் அரை மணி நேரம் வினிகரில் ஊறவைப்பது வெண்டைக்காயின் குழையும் தன்மையை குறைப்பதற்கான மற்றொரு வழி. சமைப்பதற்கு முன், வெண்டையை கழுவி உலர வைக்கவும்.
5. உண்மையில் வெண்டைக்காய்களை சமைப்பது எளிதல்ல. ஏனெனில் அது பிசுபிசுப்பாக மற்றும் குழைவாக மாறும். எனவே அதிக வெப்பத்தில் இதை சமைக்க பரிந்துரைக்கப்படுகிறது. வெண்டையை சமைக்க வறுத்தல் மற்றும் வதக்குதல் சிறந்த வழிகள். ஏனெனில் இந்த முறைகள் வெண்டைக்குள் இருக்கும் பிசுபிசுப்பை குறைக்க உதவுகிறது.
6. ஒரு காய்கறியில் உப்பு மாய்ஸ்ரைஸரை உற்பத்தி செய்யும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. எனவே சமையல் செயல்முறையின் முடிவில், கிட்டத்தட்ட முழுவதுமாக சமைக்கப்படும் போது வெண்டைகாய் ரெசிபில் உப்பு சேர்ப்பது எப்போதும் நல்லது.
குறிப்புகள்
முதலில் வெண்டைக்காயை தண்ணீரில் கழுவி, ஒட்டாமல் இருக்க துணியால் துடைக்கவும். பின்னர் அதனை வெட்டுவதற்கு முன், கத்தியை ஒட்டாதபடி லேசாக எண்ணெய் தடவவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.. ஓக்ராவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த வெண்டைக்காயை சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications











