Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
4 முட்டை இருந்தா இந்த சூப்பரான மஞ்சூரியனை செய்யுங்க...வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...ட்ரை பண்ணுங்க..
Hotel Style Egg Manchurian Recipe in Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட வாய்க்கு ருசியான ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் நான்கு முட்டை உள்ளதா? அப்படியானால் ரெஸ்டாரண்ட்டுகளில் விற்கப்படும் சுவையான முட்டை மஞ்சூரியனை செய்யுங்கள்.
இந்த முட்டை மஞ்சூரியன் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மழை பெய்யும் போது இப்படியான மஞ்சூரியனை செய்து சாப்பிட்டால் குளிரான வானிலைக்கு மிகவும் சூப்பராக இருக்கும்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் முட்டை மஞ்சூரியனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் முட்டை மஞ்சூரியன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
தேவையான பொருட்கள்:
- முட்டை - 4
- மிளகுத்தூள் - ¼ டீஸ்பூன்
- மைதா - ½ கப்
- சோளமாவு -¼ கப்
- மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
மஞ்சூரியன் செய்ய:
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்
- நறுக்கிய பூண்டு - 1 ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - அரை கப்
- சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
- தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
- சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- வெங்காயத்தாள் - 1 கைப்பிடி
- உப்பு தேவைப்பட்டால்
- மிளகுத்தூள் 1/4 டீஸ்பூன்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் முட்டை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து இட்லி குக்கரில் வேகவைத்து எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- மைதா, சோளமாவு, மிளகாய்த்தூள் மூன்றையும் தண்ணீர் விட்டு கலந்து, வெட்டி வைத்துள்ள முட்டையை அதில் ஊற வைத்து பின்னர் அதை எண்ணெயில் பொரித்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
- மஞ்சுரியன் செய்ய ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து, அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- பூண்டு மொறுமொறுப்பாக வதங்கிய பின் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் அதில் குடைமிளகாய் சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் அதில் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின்னர் பொரித்த முட்டையை சேர்த்து தேவையெனில் உப்பு சேர்த்து கடைசியாக மிளகு தூள் மற்றும் வெங்காயத் தாளை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ஹோட்டல் ஸ்டைல் முட்டை மஞ்சூரியன் ரெடி.
- வழக்கமான மஞ்சுரியன் போல அல்லாமல் இது வித்தியாசமான சுவையுடன் இருப்பதால் குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.



Click it and Unblock the Notifications











