Just In
- 1 hr ago
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- 2 hrs ago
உலர் திராட்சையை தயிரில் ஊற வைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
- 3 hrs ago
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வயசுக்கு மீறின புத்திசாலித்தனம் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 3 hrs ago
நீங்க தினமும் குடிக்கிற இந்த பானங்களாலதான் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையே வருதாம் தெரியுமா?
Don't Miss
- Automobiles
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
- News
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு காத்திருக்கும் பேரிடி.. சி வோட்டர் கருத்து கணிப்பு!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சுவையான... ஹனி சில்லி பொட்டேடோ
மாலை வேளையில் உங்கள் வீட்டு குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு பிரெஞ்சு ஃப்ரைஸ் போன்றே இருக்கும் ஹனி சில்லி பொட்டேடோ செய்து கொடுங்கள். இது அற்புதமான சுவையோடு இருப்பதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். அதோடு இதை செய்வது என்பதும் மிகவும் ஈஸி.
குறிப்பாக இது குழந்தைகள் மட்டுமின்றி, பொரியோர்களும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். இப்போது அந்த ஹனி சில்லி பொட்டோடோ ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 500 கிராம்
* சிவப்பு மிளகாய் - 1 (நன்கு பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எள்ளு விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
பிரட்டுவதற்கு...
* சில்லி ஃப்ளேக்ஸ் - 2 டீஸ்பூன்
* தக்காளி சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
* வினிகர் - 1 டீஸ்பூன்
* தேன் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதை குக்கரில் போட்டு, உருளைக்கிழங்கு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு சேர்த்து, குக்கரை மூடி, ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கை எடுத்து தோலுரித்து, பிரெஞ்சு ப்ரைஸ் போன்று நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பெரிய பௌலை எடுத்து, அதில் நன்கு பொடியாக நறுக்கிய பூண்டு, சிவப்பு மிளகாய், உப்பு மற்றும் சோள மாவை போட்டு, அதில் நீரை சிறிது ஊற்றி மிகவும் நீராக இல்லாமல் ஓரளவு கெட்டியாக கலந்து 3-5 நிமிடம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் உருளைக்கிழங்கைப் போட்டு பிரட்டி வைத்துவிட வேண்டும்.
* அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். ஒருவேளை மொறுமொறுப்பு போதவில்லை என்றால், மீண்டும் ஒருமுறை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம்.
* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பொடியாக நறுக்கிய 2 பூண்டு பல், எள்ளு விதைகள், வினிகர் மற்றும் தக்காளி சில்லி சாஸ் மற்றும் பொரித்து எடுத்துள்ள உருளைக்கிழங்கையும் போட்டு ஒரு நிமிடம் நன்கு பிரட்டி இறக்கி, பின் அதில் தேனை ஊற்றி நன்கு கிளறி, மேலே சிறிது எள்ளு விதைகளைத் தூவினால், சுவையான ஹனி சில்லி பொட்டேடோ தயார்!