Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்!
Gajlakshmi Rajyog 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது தங்களின் ராசியை மாற்றியும், நிலைகளின் மூலமும், சேர்க்கைகளாலும் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார்.

இப்படிப்பட்ட சுக்கிரன் மே 14 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மிதுன ராசியின் ஏற்கனவே தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் இந்த சுக்கிர பெயர்ச்சியால் மிதுன ராசியில் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். இப்போது மிதுன ராசியில் குரு சுக்கிரனின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் குரு சுக்கிரனின் சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.
முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். முக்கியமாக எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இதன் மூலும் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் குரு சுக்கிரனின் சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவுடன், பாராட்டும் கிடைக்கும்.
நிதி நிலைமை வலுவடையும். வாழ்க்கையில் சாதனைகளைப் புரிவீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் நல்ல பலனைப் பெறலாம்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் குரு சுக்கிரனின் சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதோடு, புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். மன அமைதி அதிகரிக்கும்.
தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு எதிர்காலத்தில் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். சுக்கிரனின் அருளால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலைமை எதிர்பாராத அளவில் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



