Latest Updates
-
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது!
Venus Transit In Mrigashira Nakshatra On 08 May 2026: வேத ஜோதிடத்தின் படி, அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

தற்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைந்து, மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். அதே வேளையில் ரோகிணி நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் மே 08 ஆம் தேதி சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். சுக்கிரன் செவ்வாயின் நட்சத்திரத்தில் நுழைவது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்களைத் தரப்போகிறது.
வேத நாட்காட்டியின் படி, சுக்கிரன் மே 08 ஆம் தேதி மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நுழைந்து, அந்த நட்சத்திரத்தில் மே 20 ஆம் தேதி வரை இருக்கவுள்ளார். சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் பல வழிகளில் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர். முக்கியமாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இதன் மூலம் நிதி நிலைமை வலுவடையும். வேலையில் அலைச்சலும், கடின உழைப்பும் தேவைப்பட்டாலும், நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
கன்னி
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் செல்வம் வேகமாக உயரும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. எடுக்கும் முயற்சிகளிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இருப்பினும், ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


