Latest Updates
-
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள்
World Asthma Day 2026: ஆஸ்துமா குணமாக இந்த கசாயத்தை 30 நாட்கள் குடிங்க..- கூறும் ஆயுர்வேத டாக்டர்!
World Asthma Day 2026: ஆஸ்துமா என்பது உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு நாள்பட்ட கோளாறு ஆகும். ஆஸ்துமா என்பது வெறும் மூச்சிரைப்பு மட்டுமல்ல, அது ஒரு நாள்பட்ட அழற்சி கோளாறு ஆகும். இந்த ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 05 ஆம் தேதி உலக ஆஸ்துமா தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஆஸ்துமா என்பது சுவாசப் பாதைகள் சுருங்கி வீங்கி, அதிகப்படியான சளியை உருவாக்கும் ஒரு நிலையாகும். இது சுவாசிப்பதை கடினமாக்கி, இருமல், மூச்சை வெளிவிடும்போது ஏற்படும் விசில் போன்ற சத்தம் (வீசிங்) மற்றும் மூச்சுத் திணறலைத் தூண்டக்கூடும். சிலருக்கு ஆஸ்துமா லேசான தொந்தரவாக இருக்கும். இன்னும் சிலருக்கு தினசரி செயல்பாடுகளை கூட செய்ய முடியாத அளவில் சிரமத்தை ஏற்படுத்தும் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கலாம். அதுமட்டுமின்றி, தீவிர நிலையில் இது உயிருக்கு ஆபத்தான ஆஸ்துமா தாக்குதலுக்கு வழிவகுக்கும்.
ஆஸ்துமாவை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் அதன் அறிகுறிகளை கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் ஆஸ்துமாவானது தூசி போன்ற ஒருசில அழற்சியைத் தூண்டும் விஷயங்களால் தான் வருகின்றன. மேலும் ஆஸ்துமாவின் அறிகுறிகளானது நபருக்கு நபர் மாறுபடும். ஆனால் பொதுவான அறிகுறிகள் என்றால் மூச்சுத் திணறல், மார்பு நெரிசல் அல்லது வலி, சப்தத்துடனான சுவாசிப்பது, தூங்குவதில் சிரமம், இருமல் போன்றவை.
இப்படிப்பட்ட ஆஸ்துமாவை குணப்படுத்த உதவும் ஒரு அற்புதமான ஆடாதொடை கசாயம் குறித்து ஆயுர்வேத டாக்டரும், ஊட்டச்சத்து நிபுணருமான டாக்டர் R.மைதிலி தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதுவும் இந்த ஆடாதொடை கசாயத்தை எப்படி தயாரிப்பது, எப்போது குடிக்க வேண்டும், எவ்வளவு குடிக்க வேண்டும், எத்தனை நாட்கள் குடிக்க வேண்டும் என்பன குறித்து விரிவாக பகிர்ந்துள்ளார். அதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
ஆடாதொடை
சாதாரண சளி, இருமல், காய்ச்சல் முதல் சுவாசம் தொடர்பான ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி என அனைத்து விதமான பிரச்சனைகளின் அறிகுறிகளையும் குறைத்து, அப்பிரச்சனையைக் கட்டுப்படுத்த ஆயுர்வேதத்தில் உள்ள ஒரு அற்புதமான மூலிகை தான் ஆடாதொடை. இந்த ஆடாதொடையைக் கொண்டு கசாயம் தயாரித்து குடிக்கும் போது, நெஞ்சு சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
ஆடாதொடை கசாயம் தயாரிப்பது எப்படி?
* 1 ஆடாதொடை இலைக்கு 1 மிளகு என்ற வீதத்தில், 4 ஆடாதொடை இலைகளையும், 4 மிளகையும் எடுத்து, ஒரு சிறிய உரலில் போட்டு நன்கு நசுக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி, அதில் நசுக்கிய இலைகளை சேர்த்து, அத்துடன் 1/4 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இப்படி 20 மிலி வரும் வரை கசாயத்தை நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின் இந்த கசாயத்தை காலை உணவுக்கு 15 நிமிடத்திற்கு முன்பும், இரவு உணவிற்கு 15 நிமிடத்திற்கு முன்பும் குடிக்க வேண்டும்.
* இப்படி தொடர்ந்து 3-4 நாட்கள் குடித்து வந்தாலே, எவ்வளவு நெஞ்சு சளி இருந்தாலும் கரைந்து வெளியேறும்.
ஆஸ்துமா உள்ளவர்கள் எத்தனை நாட்கள் குடிக்கலாம்?
ஏற்கனவே ஆஸ்துமா உள்ளவர்கள் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இந்த ஆடாதொடை கசாயத்தை தொடர்ந்து 30-60 நாட்கள், அதுவும் நோயின் தீவிரத்தைப் பொறுத்து எடுத்து வந்தால், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திக்கும் மூச்சு விடுவதில் உள்ள கஷ்டம் குறைவதை கண்கூடாக காண முடியும். அதுமட்டுமின்றி, இது நுரையீரலை பலப்படுத்தும், நுரையீரலில் உள்ள கழிவுகள், நச்சுக்களை வெளியேற்றும்.
ஆடாதொடையின் பிற நன்மைகள்
* ஆடாதொடை இலை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கும். ஏனெனில் இதில் உள்ள வேதிப்பொருட்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள், எந்த ஒரு நோய்த்தொற்றும், குறிப்பாக வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கும்.
* ஆடா தொடை இலை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், சரும புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் என எந்த வகையான புற்றுநோயையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
* மஞ்சள் காமாலை உள்ளவர்கள் இந்த ஆடாதொடை கசாயத்தை தொடர்ந்து 30 நாட்கள் குடிக்கும் போது, அதன் அறிகுறிகள் குறைவது நன்கு தெரியும்.
* இரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் அளவு குறைவாக இருந்தால், அதை அதிகரிக்க எப்படி பப்பாளி இலையின் சாறு உதவுமோ, அதேப் போல் ஆடாதொடையின் சாறு அல்லது கசாயத்தை எடுத்தால், பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
எனவே நண்பர்களே! உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது ஆஸ்துமா பிரச்சனையைக் கொண்டிருந்தாலோ, இந்த ஆடாதொடையைக் கொண்டு கசாயம் வைத்து கொடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
