Latest Updates
-
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்!
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Verkadalai Thakkali Chutney Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் காலையில் செய்யும் இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுப்பதே பெரிய வேலையாக உள்ளதா? அதுவும் இட்லி என்றால் அதற்கு சட்னி தான் சரியான சைடு டிஷ்ஷாக இருக்கும். அதில் குறிப்பாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி போன்றவையே பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய சட்னியாக இருக்கும். ஆனால் சிலருக்கு வேர்க்கடலை சட்னி ரொம்ப பிடிக்கும்.

அந்த வேர்க்கடலை சட்னியை வழக்கம் போல் செய்யாமல், ஒருமுறை அத்துடன் தக்காளியை சேர்த்து வேர்க்கடலை தக்காளி சட்னியாக செய்யுங்கள். இப்படி சட்னி செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு சொல்வார்கள்.
இந்த வேர்க்கடலை தக்காளி சட்னி குறித்து அபூர்வாஸ் நலபாகம் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த வேர்க்கடலை தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை வேர்க்கடலை - 3/4 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* காஷ்மீரி வரமிளகாய் - 3
* பூண்டு - 7 பல் (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை வேர்க்கடலையை
சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் போட்டு
குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 4
வரமிளகாய் மற்றும் 3 காஷ்மீரி வரமிளகாயை சேர்த்து நன்கு ப்ரை செய்து,
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் பூண்டு பற்களை சேர்த்து, அத்துடன் நறுக்கிய
தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை மற்றும் வரமிளகாயை சேர்த்து
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் வதக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி ஓரளவு கொரகொரவென்று அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்க்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சட்னியை தாளிப்பதற்கு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான வேர்க்கடலை தக்காளி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications