Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
தேங்காய் சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!
Hotel Style White Coconut Chutney Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு உணவாக இருப்பது இட்லி, தோசைதான். இட்லி, தோசைக்கு சிறந்த சைடிஷ் என்றால் அது சந்தேகமே இல்லாமல் சட்னிதான். சட்னி என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது தேங்காய் சட்னிதான்.
தென்னிந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே இட்லி, தோசைக்கு பெரும்பாலும் செய்யப்படும் எளிதான மற்றும் சுவையான சைடிஷ் என்றால் அது தேங்காய் சட்னிதான். பல நிறங்களில் செய்யக்கூடிய இந்த சட்னி எப்போதுமே நமக்கு ஸ்பெஷல்தான். உங்கள் வீட்டில் இன்று இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? பெரும்பாலும் உங்கள் வீட்டில் இதற்கு சைடு டிஷ்ஷாக தேங்காய் சட்னியைத் தான் செய்வீர்களா?

தேங்காய் சட்னி என்றால் அதற்கு எப்போதும் ஒரே செயல்முறைதான். ஆனால் அதில் சில பொருட்களை கூட்டியும், குறைத்தும் செய்வது அதன் சுவையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போவது வழக்கமான சட்னியிலிருந்து ஒரு பொருளை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு பொருளை சேர்த்து செய்யும் வித்தியாசமான தேங்காய் சட்னியைப் பற்றித்தான்.
இந்த சட்னியில் வழக்கமாக சேர்க்கும் பூண்டை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக வெங்காயத்தாளை சேர்த்து சட்னி அரைக்கப்போகிறோம். இது தேங்காய் சட்னிக்கு தனித்துவமான சுவையை வழங்கும். இந்த பதிவில் அட்டகாசமான தேங்காய் சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- அரை கப் ப்ரெஷாக துருவிய தேங்காய்
- கால் கப் பொட்டுக்கடலை
- 2 பச்சை மிளகாய்
- 2 வர மிளகாய்
- சிறிய துண்டு இஞ்சி
- 2 ஸ்பூன் எண்ணெய்
- கால் ஸ்பூன் கடுகு
- 2 வெங்காயத்தாள்
- கறிவேப்பிலை 1 கொத்து
செய்முறை:
- துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, சிறிது உப்பு ஆகியவற்றை 1/2 தண்ணீர் சேர்த்து மென்மையாகும் வரை நைஸாக அரைக்கவும்.
- ஒரு சிறிய வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடிக்கும் போது வெங்காயத்தாள், கறிவேப்பிலை மற்றும் சின்ன சின்ன துண்டுகளாக உடைத்த சிவப்பு மிளகாய் சேர்க்கவும்.
- வெங்காயத்தாள் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, அரைத்த சட்னியைச் சேர்க்கவும், பின்னர் சூடு ஆகும் வரை நன்கு கலக்கவும்.
- ஒரு கிண்ணத்திற்கு சட்னியை மாற்றி உடனடியாக சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.
- பல உயர்தர ஹோட்டல்களில் இந்த சட்னிதான் இட்லி, தோசையுடன் பரிமாறப்படுகிறது.
- சட்னி வெள்ளையாக இருக்க விரும்பினால் பச்சை மிளகாய் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், இல்லையெனில் சட்னி பச்சை நிறத்தில் மாறிவிடும்.
- இதில் வதக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
