Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
சரவணபவன் ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னியை எப்படி செய்யணும் தெரியுமா?
Hotel Style Tomato Chutney Recipe In Tamil: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பலரது வீடுகளிலும் காலையில் இட்லி, சட்னி, சாம்பார், வடை என்றெல்லாம் செய்து சாப்பிடுவோம். இப்படி நீங்களும் உங்கள் வீட்டில் இட்லி தான் செய்யப் போகிறீர்களா? அப்படியானால் அந்த இட்லிக்கு தேங்காய் சட்னியுடன், ஒரு தக்காளி சட்னியையும் செய்யுங்கள்.
அதுவும் சரவணபவன் ஹோட்டல் ஸ்டைலில் தக்காளி சட்னியை செய்யுங்கள். இதனால் மிகவும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த சட்னி 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1 சிறிய துண்டு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பூண்டு, வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளி, கறிவேப்பிலை மற்றம் மஞ்சள் தூள் சேர்த்து,
தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு சிறிய துண்டு புளியை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து,
சிறிது வெல்லத்தையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னி
தயார்.
Image Courtesy: Chitra's Food Book



Click it and Unblock the Notifications
