Latest Updates
-
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு?
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..!
Sun Transit In Bharani Nakshatra On 28 April 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவது மட்டுமின்றி, 14 நாட்களுக்கு ஒருமுறை நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

தற்போது சூரியன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சூரியன் ஏப்ரல் 28 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றுகிறார். அதுவும் பரணி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இந்த நட்சத்திரத்தில் மே 11 ஆம் தேதி வரை இருப்பார். இந்த பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். ஜோதிடத்தில் சூரியனுக்கும், சுக்கிரனுக்கும் பகை உறவு உள்ளது.
எனவே சூரியனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களில் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். முக்கியமாக நிதி இழப்புக்களை ஏற்படுத்தலாம். இப்போது சூரியன் பரணி நட்சத்திரத்திற்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இந்நிலையில் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் பல சவால்களை சந்திப்பார்கள். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவு எதுவும் கிடைக்காமல் போகும். இதனால் வேலைகளை முடிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமாக எந்த ஒரு முதலீடுகளை செய்யும் போதும் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை முதலீடுகளை செய்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இந்நிலையில் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் மனதளவில் ஒருவித குழப்பத்துடன் இருக்கக்கூடும். வேலையில் கவனத்தை செலுத்த முடியாமல் சிரமப்படக்கூடும். தேவையற்ற கவலைகள் மனதில் எழும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் திடீர் இடமாற்றங்களை சந்திக்க நேரிடும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்திலும் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இந்நிலையில் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் பண பிரச்சனையால் சிரமப்படக்கூடும். திடீரென்று செலவுகள் அதிகரிக்கும். இதனால் பண பிரச்சனையால் அவதிப்பட நேரிடும். குடும்ப உறுப்பினரின் ஆரோக்கிய பிரச்சனை மனக்கவலையை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் இன்னும் சில காலம் பொறுமையாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் எதிர்பாராத பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் மூலம் வேலையில் ஆர்வம் குறைந்து, வேலையை விட வேண்டிய அளவில் எண்ணம் எழும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


