Latest Updates
-
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம் -
வெயில் கொடுமையா? கோடை கால திருமணத்தை ஜில்லுனு மாத்த இந்த 5 ஐடியாக்கள் போதும்! -
Labour Day Wishes:தொழிலாளர் தினத்தில் உங்களுக்கு தெரிஞ்ச உழைப்பாளிகளுக்கு இந்த வாழ்த்தை சொல்ல மறந்துராதீங்க -
1 கப் மைதா இருந்தா இந்த சூப்பரான மங்களூர் பன்-யை ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
சஞ்சய் கபூர் சொத்து விவகாரம்: கரிஷ்மா கபூர் குழந்தைகளின் உரிமையை மீட்டெடுத்த நீதிமன்றம்! -
இந்த 4 எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம் - உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? -
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்!
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம்
மே மாதம் வந்துவிட்டது, இந்த மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறப்போவதால், ஜோதிடரீதியாக இந்த மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மே மாதத்தின் தொடக்கத்திலேயே புதன் கிரக மாற்றத்தைத் தொடங்கப்போகிறது. மேஷ ராசியில் புதன் கிரகம் அஸ்தமனமாகும் காலம், சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களையும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான மாற்றங்களையும் அளிக்கப்போகிறது.

கிரகங்களின் இளவரசரான புதன் மேஷ ராசியில் அஸ்தமிக்கும் இந்த நிகழ்வு மே 1-ஆம் தேதி தொடங்கி 27 நாட்களுக்கு நீடிக்கப் போகிறது. இந்த கிரக மாற்றம், குறிப்பாக நான்கு ராசிகளுக்குக் கடுமையான சவால்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் எந்தெந்த ராசிகாரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு, இந்த கிரக மாற்றம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. புதன் கிரகம் அஸ்தமனமாவதால், அவர்கள் மனரீதியான சிக்கல்களையும், அழுத்தத்தையும் அனுபவிக்கக்கூடும். குடும்பச் சூழல் அவர்களுக்கு சாதகமாக இருக்காது. அலுவலகப் பொறுப்புகள் அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தோன்றலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் பேசும் சாதாரண வார்த்தைகள் கூட பெரிய வாக்குவாதங்களாக மாறக்கூடும் என்பதால், மிதுன ராசிக்காரர்கள் இப்போது அமைதி காப்பதே சிறந்தது. தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து, அமைதியைக் கடைப்பிடிக்க முயற்சித்தால், இந்தக் கடினமான காலகட்டத்தை அவர்களால் வெற்றிகரமாகக் கடக்க முடியும். ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்கவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சவாலானதாக இருக்கும். அலுவலகத்தில் சூழல் சாதகமாக இருக்காது, அவர்கள் மேலதிகாரிகள் அல்லது சக ஊழியர்களால் அழுத்தத்திற்கு ஆளாகலாம். அவர்களிடம் ஒப்படைக்கும் வேலைகளை முழுமையாக முடிக்காமல் விடுவது மன அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நிதிச் சிக்கல்களுக்கும் வழிவகுக்கக்கூடும்.
அவர்களின் மகிழ்ச்சி மற்றும் நிம்மதியைக் கெடுக்கும் சில சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கையில் நடைபெறும், அதை தைரியமாக எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். வேலையில் ஏற்படும் அழுத்தம் உங்களை மனரீதியாக சோர்வடையச் செய்யும், நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்காது. ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் ஏற்படும். இது குடும்பத்தின் மகிழ்ச்சியை சீர்குலைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் புதன் அஸ்தமனத்தால் கடுமையான பணக்கஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் காரணமாக அவர்கள் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். வியாபாரிகளும், புதிய முதலீடு செய்பவர்களும் அடுத்த 27 நாட்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். எந்தவொரு வேலையையும் அவசரமாக செய்வது பெரும் நஷ்டங்களுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி, உடல்நலப் பிரச்சினைகளும் எழக்கூடும் என்பதால், உங்கள் உணவுமுறையில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். தற்போதைய சூழ்நிலைகள் காரணமாக நீங்கள் கூடுதல் கவனமாக இருக்க தேவைப்படலாம். செலவுகளுக்கும், வருமானத்திற்கும் இடையில் சமநிலையைப் பராமரிக்க நீங்கள் கடினமாக போராட வேண்டியிருக்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு மே மாதம் மிகவும் மோசமான மாதமாக இருக்கும். அவர்களால் தவிர்க்க முடியாத பிரச்சினக்கு சில பிரச்சினைகள் எழலாம். நீதிமன்ற வழக்குகள் அல்லது சொத்துத் தகராறுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குச் சூழல் பாதகமாக மாறக்கூடும். மேலும், அவர்கள் குழந்தைகளால் சில சிக்கல்களை சந்திக்க நேரிடலாம் அல்லது அவர்களின் எதிர்காலம் குறித்த கவலைகள் உங்களுக்கு எழலாம். வேலையில் இருப்பவர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும். இதனால் அவர்கள் மனஉறுதியை இழக்கும் வாய்ப்பு உள்ளது. மற்றவர்கள் சொல்வதை நம்பி எந்த முடிவையும் எடுக்காதீர்கள். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடும் சூழல் ஏற்படலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
