Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..!
Budh Asta 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அடிக்கடி அஸ்தமனமாகி உதயமாகவும் செய்து மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட புதன் மிதுனம் மற்றும கன்னி ராசிகளின் அதிபதியாவார். தற்போது புதன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்த மேஷ ராசியின் அதிபதி செவ்வாய்.

இந்நிலையில் புதன் மே 01 ஆம் தேதி மேஷ ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். அதாவது புதன் சூரியனுக்கு மிக அருகில் பயணிக்கவுள்ளார். இக்காலத்தில் புதன் பலவீனமாக இருப்பார். இப்படி புதன் அஸ்தமனமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் புதன் அஸ்தமனமாவதால் எதிர்பாராத நல்ல ஆதாயங்களைப் பெறவுள்ளனர். அதோடு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது மேஷ ராசியில் புதன் அஸ்மனமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்பால் எதிர்காலத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். நிதி நிலையிலும் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வேலையைத் தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் அதற்கு உகந்ததாக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை காண்பதோடு, முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களையும் பெறுவார்கள். கலை மற்றும் படைப்புத் துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் உள்ள பல வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை படிப்படியாக உயரும். சட்டம் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



