Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
2 ஆண்டுகள் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
Mars Transit In Aries On 11 May 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் நவகிரகங்களில் செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். அதோடு இவர் செவ்வாய் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியும் கூட.

இப்படிப்பட்ட செவ்வாய் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் வருகிற மே 11 ஆம் தேதி தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசிக்குள் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் செவ்வாய் நுழையவுள்ளார். இந்த செவ்வாயின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள் மற்றும் எதிலும் சிறப்பாக செயல்படுவார்கள். முக்கியமாக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இப்போது மே 11 ஆம் தேதி செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு முயற்சிகளிலும் வெற்றியைப் பெறக்கூடும். நிதி நிலைமை மேம்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டம் ஆதரவாக இருப்பதால், ஒவ்வொரு வேலையும் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வோ அல்லது சம்பள உயர்வோ கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஒவ்வொரு வேலையையும் உரிய நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனை பாராட்டுவார்கள். நிதி நிலைமை படிப்படியாக உயரும்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீட்டு சூழல் மேம்படும். உறவுகளைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தால், எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களும் அலுவலகத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகள் அல்லது குழந்தை பாக்கியத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் நல்ல செய்திகளைப் பெறும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications




