Latest Updates
-
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்!
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 மே 03 ஆம் தேதி முதல் 2026 மே 09 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் புதிய நட்புகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்ற சில நல்ல செய்திகளைப் பெறலாம். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் வெற்றிகள் குவியும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இருப்பினும் தேவையற்ற கவலைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். இதனால் எந்த பயனும் இல்லை. ஆரோக்கியம் தான் பாழாகும். இந்த வாரம் குடும்பத்தினரின் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். இதன் மூலம் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்கும் முன் ஆலோசனை பெறுவது நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சிறு விஷயங்களையும் பெரிதாக்குவதற்கு பதிலாக, பொறுமையாக புரிந்து நடந்து கொள்ளுங்கள். இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும். அதுவும் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே தேவையற்ற செலவுகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த வாரத்தில் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும் வகையில் இருக்கும். மேலும் புதிய நட்புகளும் கிடைக்கும். இந்த நட்புகள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். இந்த வாரத்தில் முடிவெடுக்கும் திறனும், நினைவாற்றலும் வலுவாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். தவறான முதலீடுகளால் நஷ்டங்களை சந்திக்கலாம். வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். இந்த வாரத்தில் அவசரத்தை தவிர்த்து பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பெற்று முடிவெடுப்பது நல்லது. இந்த வாரம் ஒவ்வொரு சவாலையும் சிறப்பாக கையாள்வீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு முன்னேற்றத்தையும் லாபத்தைத் தரும். வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். சிலருக்கு பதவி உயர்வு கொடுக்கலாம். மாற்றத்தை எதிர்நோக்கியிருந்தால், இந்த வாரத்தில் அதைக் காணலாம். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு துறையிலும் நேர்மறையான முடிவுகளைப் பெறுவதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். முடிக்கப்படாத பல வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இருப்பினும் வெளியாட்களுடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நடத்தையில் சற்று கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரத்தில் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். இருப்பினும் சிலருக்கு மன அழுத்தம் அதிகரிப்பதோடு, செலவுகளும் அதிகரிக்கலாம். எனவே செலவுகளை சற்று கட்டுப்படுத்த வேண்டும். சற்று புத்திசாலித்தனமாக செயல்பட்டால், பணத்தை சேமிக்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறலாம். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நேர்மறையான எண்ணங்களுடன் எதிலும் இறங்கி செயல்பட்டால், நேர்மறையான முடிவுகளைப் பெறலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மொத்தத்தில் முன்னேற்றத்தைத் தரும் வாரமாக இருக்கும். நீண்ட தூர பயணங்களை சோர்வை உண்டாக்கும் என்பதால், அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். நிதி ரீதியாக இந்த வாரம் வலுவாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. கடின உழைப்பையும், கற்றுக் கொள்ளும் ஆர்வத்தைக் காட்டினால், எதிர்பாராத அளவில் பலன்கள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் வெற்றிகள் குவியும். தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறக்கூடும். ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



