Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மே 17 முதல் அடுத்த 5 மாதம் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது..
Saturn Transit In Revati Nakshatra On 17 May 2026: வேத ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. ஏனெனில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இதனால் இவரை நீதிமான் என்று அழைப்பர். மேலும் கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். அதாவது இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார்.

இதனால் சனி பகவானின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் ஆழமாக இருக்கும். மேலும் சனி பகவான் 5 மாதத்திற்கு ஒருமுறை நட்சத்திரத்தையும் மாற்றுவார். தற்போது சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 17 ஆம் தேதி சனி பகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன் ஆவார்.
இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 9 ஆம் தேதி வரை இருப்பார். புதனின் நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வதால், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். இருந்தாலும், 3 ராசிக்காரர்கள் சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் ஆசை இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக எதிர்பாராத அளவில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். இருந்தாலும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்நிலையில் சமநிலையை பேண முயற்சிக்க வேண்டும்.
மிதுனம்
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் பல துறைகளில் நன்மைகளைப் பெறுவார்கள். முக்கியமாக தொழிலில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்து. வேலையில் நல்ல ஆதாயங்களைப் பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் உருவாகும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கலாம். இருந்தாலும், திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே துணையுடன் பொறுமையாகவும், அமைதியாகவும் பேசி அதை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.
கன்னி
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல துறைகளில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் உங்களின் திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்கும். கூட்டு தொழில் செய்பவர்ளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். மொத்தத்தில் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலையும் வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



