Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
ருசியான.. பச்சை பட்டாணி மசாலா
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு சைடு டிஷ் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் பச்சை பட்டாணி மசாலா செய்யுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு சைடு டிஷ் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் பச்சை பட்டாணி மசாலா செய்யுங்கள். இது சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு பச்சை பட்டாணி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். கீழே பச்சை பட்டாணி மசாலாவின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் இந்த ரெசிபி ரெஸ்டாரெண்ட்டில் சப்பாத்திக்கு கொடுக்கப்படும் க்ரீமியான மசாலா போன்று சூப்பராக இருக்கும். அதைப் படித்து முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: வெஜிடேபிள் சால்னா/பரோட்டா சால்னா
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1
* ஏலக்காய் - 4
* வெங்காயம் - 2 (பெரியது மற்றும் நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* முந்திரி - 10
* பூசணி விதைகள் - 3 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* பச்சை பட்டாணி - 2 கப்
செய்முறை:
* முதலில் மிக்ஸி ஜாரில் வெங்காயம், தக்காளி போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சீரகம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
* அடுத்து அரைத்த வெங்காய விழுதை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வேக விடவும்.
* அதற்குள் முந்திரி மற்றும் பூசணி விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதை மசாலாவுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, நன்கு கொதிக்க வைக்கவும்.
* மசாலா நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பச்சை பட்டாணி மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, மூடி வைத்து 5-10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பச்சை பட்டாணி மசாலா தயார்.



Click it and Unblock the Notifications











