Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
வெஜிடேபிள் சால்னா/பரோட்டா சால்னா
வெஜிடேபிள் சால்னா பரோட்டாவிற்கு மட்டுமின்றி, சப்பாத்தி, தோசை, இட்லிக்கும் அற்புதமாக இருக்கும். இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்கள் என்றால், வெஜிடேபிள் சால்னாவை செய்து சுவையுங்கள்.
நம் அனைவருக்குமே ஹோட்டலில் பரோட்டாவிற்கு கொடுக்கப்படும் வெஜிடேபிள் சால்னா என்றால் ரொம்ப பிடிக்கும். வெஜிடேபிள் சால்னாவை பரோட்டா சால்னா என்றும் அழைப்பர். பலரும் வெஜிடேபிள் சால்னாவை வீட்டில் செய்ய விரும்புவார்கள். ஆனால் அதை எப்படி செய்வதென்று பலருக்கும் தெரியாது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை அந்த பரோட்டா சால்னா என்னும் வெஜிடேபிள் சால்னாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது.

வெஜிடேபிள் சால்னா பரோட்டாவிற்கு மட்டுமின்றி, சப்பாத்தி, தோசை, இட்லிக்கும் அற்புதமாக இருக்கும். இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்கள் என்றால், வெஜிடேபிள் சால்னாவை செய்து சுவையுங்கள். அதோடு இது அனைவருமே விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும். இப்போது பரோட்டா சால்னா அல்லது வெஜிடேபிள் சால்னாவின் செய்முறையைப் பார்ப்போம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
* காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு) - 3/4 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மீல் மேக்கர் - 1/4 கப்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* புதினா - 10 இலைகள்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
வதக்கி அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* பெரிய வெங்காயம் - 1
* தக்காளி - 1
* இஞ்சி - 1/4 இன்ச்
* பூண்டு - 4
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கசகசா - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* பட்டை - 1/4 இன்ச்
* கிராம்பு - 2
* அன்னாசிப் பூ - 1
* ஏலக்காய் - 1
செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய் மற்றும் மசாலாப் பொடியைத் தவிர அனைத்தையும் போட்டு, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் மசாலா பொடிகளை சேர்த்து கிளறி, தேங்காயையும் போட்டு 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* கலவை குளிர்வதற்குள், மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். மீல் மேக்கர் பெரிதான பின்னர், அந்த மீல் மேக்கரை குளிர்ந்த நீரில் ஒருமுறை போட்டு எடுத்து பிழிந்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு வதக்கி வைத்துள்ள வெங்காய கலவையை மிக்ஸியில் போட்டு, சிறிது நீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, புதினா சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, அரைத்து வைத்துள்ள மசாலா, மீல் மேக்கர் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 1-2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து கொத்தமல்லியை மேலேத் தூவினால், சுவையான வெஜிடேபிள் சால்னா ரெடி!



Click it and Unblock the Notifications