Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
இட்லி, தோசைக்கு சுருக்குனு இருக்கும் பச்சை மிளகாய் கொத்தமல்லி சட்னி ரெசிபி..செஞ்சு பாருங்க தாறுமாறா இருக்கும்!
Green Chilli Chutney Recipe in Tamil: காரம் என்றாலே ஓடும் பலருக்கு மத்தியில் நாவில் எச்சில் ஊற விரும்பி உண்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பச்சை மிளகாயை இரண்டாக கீறி அதனுள் உப்பை நிரப்பி எண்ணெயில் வதக்கி தண்ணீரில் ஊரும் மீந்து போன சாதத்துடன் மோர் கலந்து வறுத்த மிளகாயை வைத்து சாப்பிட்டால் என சிலர் வர்ணிக்கும் போதே நமக்கு நாவில் எச்சில் ஊற துவங்கி விடும்.
சிலர் பச்சை மிளகாயை அப்படியே கடித்து சாப்பிடுவார்கள் சர்க்கரையை போல. இவர்களை பச்சை மிளகாய் பிரியர்கள் என்பதை விட வெறியர்கள் என்றே சொல்லலாம். கேட்டால் உணவின் சுவையே காரம் தான் என்பார்கள். முடிந்தவரை அதிக அளவு காரம் சாப்பிடுபவர்கள் தினசரி உணவில் மோர் அல்லது இளநீர் சேர்த்து கொள்வது நல்லது. சரி இப்போது கார பிரியர்களுக்காகவே எப்படி காரசாரமான பச்சை மிளகாய் சட்னி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- பச்சை மிளகாய் - 8
- கொத்தமல்லி இலை - 2 கைப்பிடி அளவு (தண்டுடன்)
- சீரகம் - ¼ டீ ஸ்பூன்
- பூண்டு - 6 - 8 பல்
- எலுமிச்சை - ½ பழம்
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - ½ டீ ஸ்பூன்
- உளுந்தம்பருப்பு - ½ டீ ஸ்பூன்
- பெருங்காயம் - சிறிதளவு
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- பச்சை பசேலென்று புதியதாக இருக்கும் பச்சை மிளகாயை எடுத்து
நன்றாக கழுவி காம்பு பகுதியை நீக்கி விடவும்.
- பின் அவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.
- கொத்தமல்லி இலைகளை மெல்லிய தண்டு பகுதியுடன் சுத்தம் செய்து மண்
இல்லாமல் ஓடும் நீரில் கழுவி எடுத்து கொள்ளவும்.
- எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி சாறு பிழிந்து விதைகளை நீக்கி
வைக்கவும்.
-எலுமிச்சை பழத்தை தரையில் வைத்து நாம் கைகளால் அழுத்தி உருட்டி
பிழிந்தால் சாறு நன்றாக கிடைக்கும்.
- பூண்டு பற்களை தோல் நீக்கி வைத்து கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, சீரகம் மற்றும்
கொத்தமல்லி சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
- பின் அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து
நன்றாக அரைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிடவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- பின் அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து
பொன்னிறமாக வறுக்கவும்.
- பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அதனுடன் பெருங்காயம் சிறிதளவு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- அதை நாம் அரைத்து வைத்த சட்னி உடன் சேர்த்து நன்றாக கிளறினால்
காரசாரமான பச்சை மிளகாய் கொத்தமல்லி சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications











