Latest Updates
-
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா?
சென்னை ஸ்டைல் வடகறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்...
Chennai Style Vada Curry Recipe In Tamil: உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? சற்று வாய்க்கு ருசியாகவும், இதுவரை நீங்கள் கடைகளில் மட்டுமே வாங்கி சாப்பிட்ட ஒரு சுவையான சைடு டிஷ்ஷை வீட்டில் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வடகறியை செய்யுங்கள்.
பொதுவாக வடகறிக்கு வடையை செய்து, பின் மசாலாவை செய்வார்கள். ஆனால் இந்த வடகறிக்கு வடையை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாறாக அதை உதிர்த்த நிலையிலேயே வேக வைத்து கிரேவியுடன் சேர்க்க வேண்டும். இதனால் இந்த ஸ்டைல் வடகறி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். குறிப்பாக பேச்சுலர்களும் வீட்டில் இதை ட்ரை செய்யலாம்.

உங்களுக்கு வடகறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வடகறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப்பருப்பு - 200 கிராம்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 2
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 2
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 5
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை நீரில் ஒருமுறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் சோம்பு மற்றும் 3 வரமிளகாய் சேர்த்து, நீரை
ஊற்றி 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, மிக்சர் ஜாரில் ஊற வைத்த கடலைப்பருப்பு, சோம்பு
மற்றும் வரமிளகாயை சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், அரைத்த பருப்பை சேர்த்து, 1/2 டீஸ்பூன் உப்பு
சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து, தொடர்ந்து கிளறி விட்டு வேக
வைக்க வேண்டும்.
* அரைத்த பருப்பானது நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை,
அன்னாசிப்பூ, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
பச்சை மிளகாயை சேர்த்து, வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, 1 டீஸ்பூன் உப்பு
சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து
குறைவான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, பச்சை வாசனை போக கொதிக்க வைக்க
வேண்டும்.
* பின்னர் அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, நீர்
கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து நன்கு
கிளறி விட்டு, மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக
வைத்து இறக்கினால், சுவையான சென்னை ஸ்டைல் வடகறி தயார்.



Click it and Unblock the Notifications











