Latest Updates
-
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...!
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்..
Cauliflower Peas Gravy Recipe In Tamil: வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவரும், பச்சை பட்டாணியும் உள்ளதா?
அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி நன்கு க்ரீமியாகவும், ருசியாகவும் இருப்பதால், உங்கள் வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் பட்டாணி கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் பட்டாணி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* முந்திரி - 7
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* காலிஃப்ளவர் - சிறிது
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெண்ணெய் - 1 ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* பிரஷ் க்ரீம் - 1 ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கொதிக்கும் நீரில் காலிஃப்ளவரை சேர்த்து 5 நிமிடம் ஊற
வைத்து எடுத்து, பிளெண்டரில் போட்டு துருவி எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய தக்காளி மற்றும் 7
முந்திரியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய்
மற்றும் 1 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சூடானதும், மஞ்சள் தூள், மிளகாய்
தூள், மல்லித் தூள், சீரகத் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் பச்சை பட்டாணியை சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி நன்கு கலந்து விட வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* பின்னர் அதில் துருவி வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து நன்கு கிளறி,
எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் பிரஷ் க்ரீம் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் பட்டாணி கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications











