Latest Updates
-
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
2 குடைமிளகாயும், 1 கப் தயிரும் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்...
Capsicum Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? எப்போது சப்பாத்தி செய்தாலும், ஒரே மாதிரியான சுவையில் தான் சைடு டிஷ் செய்து சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் குடைமிளகாயும், தயிரும் இருந்தால், அதைக் கொண்டு மசாலா செய்யுங்கள்.
இப்படி ஒருமுறை மசாலா செய்தால், பின் அடிக்கடி இந்த சைடு டிஷ்ஷை செய்வீர்கள். முக்கியமாக இந்த குடைமிளகாய் மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். ஆகவே வேலைக்கு செல்பவர்கள், பேச்சுலர்கள் இந்த மசாலாவை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசர காலத்தில் கைக்கொடுக்கும்.

உங்களுக்கு குடைமிளகாய் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன்
* பூண்டு - 1 டீஸ்பூன்
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* புளிப்பில்லாத தயிர் - 1 கப்
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய
வெங்காயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் நீளவாக்கில் நறுக்கிய குடைமிளகாய், பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வேர்க்கடலையை சேர்த்து ஒன்றிரண்டாக
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் பொடித்த வேர்க்கடலையையும் குடைமிளகாயுடன் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கைகளால் நன்கு பிசைந்து
பிரட்டி விட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சீரகம் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பிசைந்து வைத்துள்ள குடைமிளகாய் கலவையை சேர்த்து,
நன்கு 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் 1 கப் புளிப்பில்லாத தயிர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நீரை
ஊற்றி கிளறி, 2 நிமிடம் வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால்,
சுவையான குடைமிளகாய் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications











